சுவிஸ் நாட்டில் தங்கப்பதக்கம்வென்ற ஈழத்துச் சிறுமி காவியா!

0
210

சுவிஸ்நாட்டில் உள்ள பிரபல வங்கியான UBS நிறுவனம் நடத்திய “Ubs kids cup ” விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று. வெற்றிவாகை சூடினாள். எங்கள்
ஈழத்துச்சிறுமி காவியா .

நகர மற்றும் மாநில ரீதியாக போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு சுவிஸ் நாடு தழுவிய போட்டிகள் கடந்த 11ஆம்திகதி சூரிச் மாநிலத்தில்
நடைபெற்றது .
இதில் 07 வயதுப்பிரிவில் ஓட்டம்,நீளம்பாய்தல்.பந்தெறிதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி.
புள்ளிகள் அடிப்படையில் காவியா
சுவிஸ் தழுவிய ரீதியில் முன்னிலை பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டாள்.
காவியா தாயகத்தில் சித்தன்கேணியைச்சேர்ந்த தற்போது winterthur இல் வசித்து வரும் திரு.திருமதி அகிலரூபன் சாளினி தம்பதிகளின் புதல்வியாவார்.

“இளையவளின் இனிய இந்த வெற்றி
இனிவரும் காலங்களில் விளையாட்டுத்துறையில் இவள் எட்டிப்பிடிக்கப்போகும் இமாலய வெற்றிக்கான படிக்கல்லாக அமையட்டும் என்று அகமகிழ்ந்து வாழ்த்துரைப்போம்.

“வாழ்த்துக்கள் இனிய தங்கமகளே “

எஸ்.கவிதரன் -சுவிஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here