ஓவியர் புகழேந்தியின் தியாகதீபம் திலீபனுடைய வீரச்சாவு ஓவியம்!

0
1015

ஓவியர் புகழேந்தியின் படைப்புலகும் தூரிகையின் மொழியும்நேர்காணல்: தி. தவபாலன்புலிகளின் குரல், தமிழீழம், மே 2005எரிமலை, பிரான்ஸ், ஜூலை

2005ஈழத்தமிழர்களுடைய போராட்டத்தை மையமாக வைத்து நீங்கள் வரைந்த ஓவியங்களில் இரண்டு முக்கியமான ஓவியங்கள் இருப்பதாகக் கருதுகிறேன். ஒன்று போராளி அடுத்து தியாகதீபம். திலீபனுடைய வீரச்சாவு ஓவியம். இதில் தியாகி திலீபனுடைய ஓவியம் மிகச் சிறந்ததாக அந்த உணர்வை வெளிப்படுத்துவதாக அமைகிறது. உண்மையில் ஒரு புகைப்படத்தில் கூட அந்த உணர்வை நாங்கள் பார்த்ததில்லை. அதனை எவ்வாறு உள்வாங்கி வெளிப்படுத்தினீர்கள்?அதாவது ஒரு புகைப்படத்திற்கும் ஓவியத்திற்கும் வேறுபாடு என்னவென்றால் இருக்கின்ற உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவது புகைப்படம். எப்படித்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் இல்லாத ஒன்றைப் புகைப்படத்திலே கொண்டுவரமுடியாது. அது ஒளிநிழல் சார்ந்து கூட்டமைவு சார்ந்த எப்படி எடுத்தாலும் ஒரு அளவோடு மட்டுப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் ஒரு ஓவியம் என்பது. அதற்கு இருக்கும் தளம் என்பது, இன்னொரு வகையான விரிந்து பரந்து செல்கின்ற ஒரு தளமாக இருக்கின்றது. அங்கேதான் ஒரு படைப்பாளனாக நான் பல்வேறு விடயங்களை உள்வாங்கிக் கொள்கிறேன். அதை அப்படியே என்ன சொல்ல வருகின்றோமோ அதற்குத் தகுந்த மாதிரி வெளிப்படுத்துகிறேன். அப்படித்தான். நான் திலீபனுடைய உண்ணாவிரத நிகழ்வையும், பன்னிரண்டு நாள் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து இறந்ததையும் ஒவ்வொரு நாளும் தமிழகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதாவது கண்ணால் அல்ல. ஒவ்வொரு நாளும் செய்திகளில் வரும் நிகழ்வுகள் எம்மை உறங்கவிடாது செய்து கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் இந்நிகழ்வு மிகப்பெரிய வேதனையைத் தந்தது. யாராவது தலையிட்டு அவ்வுண்ணாவிரதத்தைத் தடுத்து நிறுத்துவார்களா என நான் ஏங்கி இருக்கிறேன். இவரது கோரிக்கைகளை நிறைவேற்றி அவ்வுண்ணாவிரதத்தைத் தடுத்து நிறுத்துவார்கள் என நான் ஒவ்வொரு நாளும் நினைதுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் 12 ஆவது நாள் மிகப்பெரிய சோகம் நிகழ்ந்தது. அவர் உயர் நீத்தார். நீண்ட நாட்களாக என் மனதை அழுத்திக் கொண்டிருந்த நிகழ்வு அந்த நிகழ்வு. உடனடியாக அவ் ஓவியத்தை நான் செய்யவில்லை. பல்வேறு ஓவியங்களை நான் படைத்தேன். பல்வேறு வகையான நிகழ்வுகளை இடையிடையே நான் படைத்தேன். திலீபன் உண்ணாவிரதமிருந்ததை நான் செய்யவில்லை. எனக்கு அவ்வளவு வலி இருந்தும் நான் உடனடியாக அதை வரையவில்லை. இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டு இருக்கையிலே நான் இந்த இருபதாம் நூற்றாண்டை, ஓவியத்திலே மீள் பார்வை பார்க்க வேண்டும் என்று எண்ணி, ஓவியத்திலே வரலாற்றைப் படைக்க வேண்டும் என்று எண்ணி, அந்தத் திலீபனுடைய ஓவியத்தையும் இருபதாம் நூற்றாண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையிலே திலீபன் ஓவியத்தையும் நான் படைத்தேன். படைத்தேன் என்றால் என் மனதில் நீண்ட நாட்கள் குமுறிக் கொண்டிருந்த உணர்வு ஒன்று வெளிப்பட்டது.பல்வேறு ஓவியங்கள் இன்றைக்கு வரையப்படாத ஓவியங்கள் என்னிலே அழுத்திக் கொண்டிருக்கின்றது. அப்படித்தான் 87இல் இருந்து அதாவது திலீபன் உண்ணாவிரதம் இருந்த ஆண்டிலிருந்து இவ்வுணர்வு என்னை அழுத்தி அழுத்தி ஒவ்வொரு நிகழ்வுகளைச் செய்யும் போதும் அதைப்பற்றி தரவுகளை நான் எடுப்பேன். ஆனால் திலீபன் உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றி நான் எந்தத் தகவல்களும் எடுக்கவில்லை. காரணம் இவ்ஈழப்போராட்டத்தைப் பற்றி எந்தச் செய்தியும் எனக்கு அத்துப்படி. நான் எல்லா வகையான தகவல்களையும் மனதிலே வைத் திருப்பேன். அது ஆண்டுகளாக இருந்தாலும் சரி, நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் மனதிலே அழுத்தி வைத்திருக்கும் நிலைதான் இன்னும் இருக்கிறது. அப்படி அந்தச் சிக்கலிலே எனக்கு நீண்டதொரு அனுபவம் இருப்பதினால் இந்த ஓவியத்தை எந்த ஒரு தகவல்களையும் எடுக்காமல் அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்து அந்தக் கித்தானுக்கு எதிரே அமர்ந்துகொண்டு வழக்கமாக நான் ஓர் ஓவியத்தைப் படைக்கின்றபோது நான் அதற்குத் தேவையான முன்தயாரிப்பு ஓவியங்கள் என்று பல்வேறு ஓவியங்களை வரைவது வழக்கம். ஒரு இருபது அல்லது முப்பது முன் தயாரிப்பு ஓவியங்களை வரைவேன். ஆனால் திலீபன் ஓவியத்திற்கு அப்படியும் நான் வரையவில்லை. நேரடியாகக் கித்தானோடு என்னுடைய தூரிகை உறவு கொண்டது. அப்போதுதான் நான் அந்த ஓவியத்தை முடித்து என்னுடைய ஆழ்மனதில் இருந்தவைகளையெல்லாம் ஒவ்வொரு துளியும் அந்த உயிர் பிரிகின்ற அந்தத் தருணத்தைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்தேன். அந்தக் கடைசி நிமிடத்தில் அதாவது அந்த உயிர் பிரிந்தபோது என்னவலியை இங்கு நேரடியாகப் பார்த்த மக்கள் பெற்றோர்களோ அந்த உணர்வை அவ்ஓவியத்திலே கொண்டுவர வேண்டும் என நான் நினைத்தேன். அதற்கு முன் நான் திலீபன் ஓவியத்தை மிகவும் எளிமையான ஒரு படைப்பாக ஆனால் அது எந்தச் சிக்கல்களும் இல்லாத ஒரு எளிமையாக வெளிப்படுத்தப்பட்ட, அந்த உயிர் பிரிந்த நிலையிலும் அதில் ஓர் உணர்வு வெளிப்படுத்தக்கூடிய ஓர் ஓவியமாக இருந்தது. இன்று அனைத்துத் தரப்பு மக்களாலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஓவியமாகவும் இருக்கின்றது.

(ஓவியர் புகழேந்தி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here