தமிழர் தாயகத்தில் கோவிட் தொற்றுக் காரணமாக கடந்த 18.09.2021 சாவடைந்த ஈழத்தின் புகழ் பூத்த இசைக் கலைஞர் சதாசிவம் வேல்மாறன் (வயது 55) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று புதன்கிழமை காலை தாயகத்தில் கோவிட் விதிகளுக்கு அமைவாக இடம்பெற்றது.

ஈழத்தின் புகழ்பூத்த தபேலா, மிருதங்க வித்துவானும் ஆசிரியருமான சதா வேல்மாறன் அவர்கள், அதிகமான தமிழீழத் தேசிய கானங்களுக்கும் ஈழத்துப் பாடல்களுக்கும் அணிசேர் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.
ஓ..மரணித்த வீரனே..,மாவீரர் யாரோ என்றால்….,மாவீரர் புகழ் பாடுவோம்.. போன்ற பல பாடல்களில் இவர் அணிசேர் கலைஞராகப் பணியாற்றியுள்ளமையும் .
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சதா வேல்மாறன் அவர்களின் கலைப்பணியைப் பாராட்டி பல தடவைகள் மதிப்பளிப்புச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சதாசிவம் வேல்மாறன் அவர்களின் வணக்க நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் எதிர்வரும் 24.09.2021 வெள்ளிக்கிழமை 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)