4 ஆகஸ்ட் 2006 யில் மூதூரில் அவர்கள் காரியாலயத்தில் வைத்து 17 பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாட்டாளர்கள் என்பதற்கு மேலாக அவர்கள் அனைவரும் தமிழர்களாக இருந்தது தான் முக்கியமான செய்தி.
9 வருடங்கள் ஆகியும் நீதியற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முள்ளிவாய்கால் படுகொலை நடைபெற்று 6 வருடங்களுக்கு மேலாகிய சூழலில் சிறி லங்காவில் – தமிழ் ஈழ பிரதேசங்களில் – மற்றும் சிறி லங்காவில் நடைபெற்ற அணைத்து தமிழின இனப்படுகொலைக்கும் நீதி கேட்டு நாம் நிற்கிறோம்.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் 4 மார்ச் 2014 யில் சர்வதேச விசாரணை என்ற பிம்பத்தை ஏற்படுத்தி நம்பிக்கை கொண்டுத்த ஐக்கியநாடுகள் சபை – இன்று சிறி லங்காவில் உள்ளக விசாரணை என்று பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
4 ஆகஸ்ட் 2015 – அன்று 11 கிளிச்சியில் அமைத்துள்ள படுகொலை செய்யப்பட்ட 17 பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாட்டாளர்களின் நினைவு சின்னம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் நினைவஞ்சலி நிகழ்வில் நீதியை வலியுறுத்துவோம்.
– தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
தொடர்புகளுக்கு: 06 52 72 58 67