காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா. செயலணி இலங்கைப் பயணத்தை பிற்போட்டது!

0
106

logo-onuகாணாமற்போனோர் தொடர்பான ஐ.நா. செயலணி, நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு மேற்கொள்ள விருந்த பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா. செயலணி நாளை தொடக்கம் 10 நாள்கள் இலங்கையில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. எனினும், எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தப் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின்னரே இந்தக் குழுவின் பயணம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பரப்புரைகள் நடந்து கொண்டிருக்கும்போது. ஐ.நா குழு பயணம் மேற்கொள்வது நெருக்கடியானதாக இருக்கும். சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்துப் பிரச்சினைகளை அணுகுவது கடினமானது. எனவே தான் தேர்தல் முடியும் வரை ஐ.நா செயலணியின் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here