17ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம் ஐ.நாவினை அண்மிக்கின்றது!

0
193

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவினுடைய 4ம் நாள் தொடர் உண்ணா நோன்பின் 34ம் ஆண்டு நினைவில் நிற்கின்றோம். இன்னும் விடுதலைப் பசியோடு காத்திருக்கும் திலீபன் அண்ணா போன்ற பல மாவீரர்களின் வேணவா நிறைவேற இன்றோடு 17ம் நாளாக 18/09/2021 தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். மற்றும் வரலாற்று பூர்வீக தாயகமான தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு எனும் நிலைக்கு வாழிட நாடுகளை பலப்படுத்திக்கொண்டு சுவிசு நாட்டில் பயணிக்கின்றது. நேற்றைய தினம் Fribourg மாநகரத்தில் தமிழீழ மக்களின் எழுச்சியான வரவேற்போடு நிறைவடைந்து இன்று மீண்டும் பயணம் Lausanne மாநகரம் நோக்கி பயணிக்கின்றது.

எதிர்வரும் 20/09/2021 ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் பெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருப்பதால் ஐ.நா வின் செவிப்பறைகள் முழங்கவும் வெகுவிரைவாக தமிழருக்கு நீதி கிடைக்கவும் பி.ப 02:30 மணியளவில் அனைத்து தமிழ் மக்களும் கூடி உங்கள் வரலாற்றுக் கடமையினை ஆற்ற வாருங்கள்.

“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை”

  • தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here