விக்கியின் கோரிக்கைக்கு ஐ.நா. ஆதரவு!

0
104

viki-3-680x365நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுதல் போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையிடம் விடுத்த கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை செப்ரெம்பர் மாதம் வெளியிடப்பட்டதன் பின்னரே உள்ளக விசாரணைப் பொறிமுறைமையா அல்லது சர்வதேச விசாரணையா என்பது நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பம் மற்றும் நிதியியல் ரீதியான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலங்கை அரசினதும் மக்களினதும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருதல், சமாதானத்தை கட்டியயழுப்புதல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் போன்ற அனைத்து விவகாரங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here