மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை நாளை; இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்க அரசாங்கம் திட்டம்!

    0
    158
    இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என கருதுகின்ற விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் மனித உரிமை பேரவைக்கு தெரிவிக்கவுள்ளார்
    இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் பலகடுமையான கட்டுப்பாடுகள் அடங்கிய தீர்மானத்தை பெப்ரவரியில் மனித உரிமை பேரவை நிறைவேற்றியது.

    இந்த தீர்மானங்களில் எவை நடைமுறைப்படுத்தப்பட்டன எவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிப்பதே மனித உரிமை ஆணையாளரின் நாளைய உரையின் நோக்கம்.
    கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தை பொறுத்தவரை இம்முறையும் கடந்த முறை எந்தவித்தியாசமும் இருப்பதாக தோன்றவில்லை.
    நாளைய அமர்விற்கு முன்னதாக அரசாங்கம் அனைத்து நாடுகளிற்கும் 14 அம்சங்களை கொண்ட அறிக்கையொன்றை வழங்கியது.
    இந்த அறிக்கை மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கத்தின் சாதனைகளை தெரிவிப்பதாக காணப்படுகின்றது.
    அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இரண்டு நோக்கங்களை அடிப்படையாக கொண்டது- ஒன்று கடுமையான விமர்சனங்களை தவிர்ப்பது.
    இரண்டாவது சர்வதேச சமூகம் கருதுவதற்கு மாறாக கடந்த தீர்மானம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிப்பது.
    இது மாத்திரமல்ல மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது அரசாங்கத்தின் அணுகுமுறை மிகவும் சமரசதன்மை கொண்டதாக காணப்படுகின்றது.
    இலங்கையில் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்களை பார்வையிடுவதற்காக மார்ச் மாதத்திற்கு முன்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என அடுத்தவாரம் அரசாங்கம் அழைப்பை விடுக்கவுள்ளது.
    எனினும் மனித உரிமை ஆணையாளர் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தான் அடையாளம் கண்டுள்ள விடயங்களை அரசாங்கம் முதலில் நடைமுறைப்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கின்றது என குறிப்பிட்டுள்ளன.
    சிவில்சமூகத்தினருடன் ஜனாதிபதி கடந்த சில வாரங்களிற்கு முன்னர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே கவரும் தாக்குதல் திட்டம் ஆரம்பமானது.
    அரசாங்கத்தின் அறிக்கை வெளியாகியுள்ள போதிலும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கடுமையானதாக காணப்படும் என ஜெனீவாவில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    அவருடைய உரை அல்லது அறிக்கை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பெரிதும் பிரதிபலிப்பதாக காணப்படும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here