12 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கக்கட்டிகளை இந்தியா மும்பை நகரில் இருந்து இலங்கைக்கு கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்ரை இன்று அதிகாலை 24 தங்கக்கட்டிகளுடன் கைது செய்ததாகவும் குறித்த சந்தேக நபர் அக்குறனை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
9W 256 என்ற விமானத்தில் குறித்த சந்தேக நபர் வருகை தந்துள்ளதுடன், அந்த விமானத்தின் விமானி வழங்கிய தகவல்களின் படி அவர் கைது செய்யப்பட்டதாகவும் லெஸ்லி காமினி தெரிவித்தார். அத்துடன் சந்தேக நபரின் பயணப் பையில் இருந்த தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.