“பெரும்புலவர் புலமைப்பித்தன் ஐயா ” அவர்களுக்கு புகழஞ்சலிப் பாடல்!

0
480

உனைப்போல் ஒரு புலவன் பிறந்ததில்லை…
உண்மை உணர்வை நெஞ்சில் சுமந்ததில்லை…

இன உணர்வே உனது மூச்சானது…
இயல்பு மொழியே உனது பேச்சானது…

தமிழினம் செழிக்கவே பாடல் நெய்தாய்…
தன்மானம் தழைக்கவே தேடல் செய்தாய்…

( உனைப்போல் ஒரு புலவன் பிறந்ததில்லை…)

புரட்சித்தலைவர் போற்றிப் புகழ்ந்த பெரும் புலவன்…
அரசவையை அலங்கரித்த ஆற்றல் கொண்ட கவிஞன்…

தமிழீழக் கனவை ஏந்தி தாய் பறவையாய் திரிந்தாய்…
தடைகள் பல தகர்த்தெறிய தம்பிக்குத் துணை இருந்தாய்…

பகுத்தறிவுப் பகலவனின் பாதை உந்தன் பாதை…
பண்பு கொண்ட தமிழினத்தின் தேவை உந்தன் தேவை…

உன் திரைப்பாடல் தித்திக்குமே தேனைப் போல இன்றும்…
நல் விதையாக முளைவிடுமே இளையோர் மனதில் என்றும்…

என் தம்பி வருவான் நம்பி இருங்கள் என்று சொன்னாயே…
உயிர் மூச்சை நீயும் காற்றில் கலந்து ஏனோ சென்றாயே…

( உனைப்போல் ஒரு புலவன் பிறந்ததில்லை…)

தனித்துவத்தின் தலைமகனாய் நீயும் இருந்தாய்…
தன்னலமில்லா தடத்தின் பாதை நீயும் நடந்தாய்…

பெருந்துயரை வாழ்வில் கடந்த பெருமகனே…
பிசகிடாத கொள்கை கொண்டு நடந்தவனே…

“பூகோளமே பலிபீடமாய்” நீ யாத்தாய் காவியம்…
புலிகள் இயக்கம் தழைத்திட நீதானே சரணாலயம்…

தமிழ் வாழ பாடல் எழுதி எழுச்சித் தூண்டினாய்…
திரைவானில் உன் தடத்தை நிலையாய் நாட்டினாய்…

தமிழீழக் கொடியை ஏற்றித் தாகத்தை விதைத்தாய்…
தமிழீழத் தலைவர் நெஞ்சில் தனியிடம் பிடித்தாய்…

( உனைப்போல் ஒரு புலவன் பிறந்ததில்லை…)

  • ஏ.இரமணிகாந்தன்
    பாடலாசிரியர்,
    08/09/2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here