1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நாவற்குழி மறவன்புலோ பகுதியில் இராணுவ சுற்றிவளைப்பின் போது காணாமல் ஆக்கப்பட்ட 32 பேர் நினைவாக நடுகல் நாட்டியமை தொடர்பில் ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக தனது வதிவிடத்திலுள்ள சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி நடுகல்லில் ஈழத்தமிழர் என குறிப்பிடப்பட்டமை தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குமாறு கோரியதாக சச்சிதானந்தன் தெரிவித்தார்.
எனினும் தற்போதைய கொரோனா பெருந்தொற்று முடிந்த பின்னர் வருகை தருமிடத்து வாக்குமூலமளிக்க தயாராக இருப்பதாக திருப்பியனுப்பியுள்ளார்.
பின்னராக யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் உள்ளிட்ட பலர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததாக தெரியவருகின்றது.
இதேவேளை, நாவற்குழி படைமுகாமிற்கு பொறுப்பாக இருந்த துமிந்த கெப்பிற்றிபொல தலைமையில் 1996ம் ஆண்டு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட துமிந்த கெப்பிற்றிகொல தற்போது இலங்கை இராணுவ தலைமையகத்தில் இராணுவ கட்டகளை பிரதானியாக பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.