நோயுற்ற பூமிக்குத் தடுப்பூசி கிடையாது..! ” உலக பல்லுயிர் மாநாட்டில் மக்ரோன்

0
225

உலகம் பல்லுயிர்த் தன்மையை மிக
வேகமாக இழந்துவருகின்ற நிலையில்
உயிரின் பல்வகைமை தொடர்பான
உலகளாவிய உச்சி மாநாடு (biodiversity summit) பிரான்ஸின் மார்செய் நகரில்.
தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ்
பெருந் தொற்றுக் காலத்துக்குப் பின்பு
சூழல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்புத்
தொடர்பாக நடத்தப்படுகின்ற மிக முக்
கியமான மாநாடு இதுவாகும்.

மத்தியதரைக் கடல் துறைமுக நகரமான
மார்செய்யில்(Marseille) வெள்ளியன்று
தொடங்கிய இந்த மாநாட்டில் உலகெங்
கும் இருந்து ஆயிரக்கணக்கான அறிவி
யாளர்கள், சூழல் பாதுகாப்பு நிபுணர்கள்
மற்றும் அதிகாரிகள் நேரிலும் நேரலை
வழியிலும் கலந்துகொண்டு பல்லுயிர்ப்
பாதுகாப்புத் தொடர்பான கருத்துக்களை
பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்திய
பிரெஞ்சு அதிபர் மக்ரோன்,”பூமியின்
நோய்க்குத் தடுப்பூசி எதுவும் கிடையாது”
என்று தெரிவித்தார். பூச்சி கொல்லிப்
பயன்பாடுகளையும் பிளாஸ்ரிக் மாசுக் களையும் நிறுத்துதல், மழைக்காடுகளது
அழிப்புக்குக் காரணமான மூலப் பொரு
ள்களைக் கண்டறிந்து இல்லாமற்செய்
தல் போன்ற அவசரப் பணிகளை விவரித்
தார். உலகம் அதன் இலக்குகளை ஏற்றுக்
கொள்ளவேண்டும். இயற்கைக்கு நிதி
அர்ப்பணிப்புகளைச் செய்வதற்கு முன்
வரவேண்டும்.பூமியின் துருவப் பகுதிப்
பிராந்தியங்களை உலகின் பொதுச் சொத்தாக (common global assets) அங்கீ
கரிக்க வேண்டும் – எனவும் மக்ரோன்
தனது நீண்ட உரையில் வலியுறுத்தி
னார்.

இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச
ஒன்றியத்தால் (The International Union for the Conservation of Nature) நடத்தப்படுகி
ன்ற மாநாட்டில் அந்த ஒன்றியம் அழிந்து
வரும் உயிரினங்களின் புதிய”சிவப்புப்
பட்டியல்” (“red list”) ஒன்றை வெளியிட்டி
ருக்கிறது.இந்தோனேசியாத் தீவுகளில் காணப்படுகின்ற Komodo dragon எனப்படு கின்ற ராட்சதப்பல்லி இனங்கள் அந்தப்
பட்டியலில் முதல் இடத்தில் உள்ளன.

உலகின் மிகப் பெரிய பல்லி இனமாகிய கொமோடோ ட்ரகன்கள்’ இந்தோனேசியா
வில் தேசிய வனவிலங்குப் பூங்காவாகப் பேணப்படுகின்ற ஒரு பகுதியை உள்ள டக்கிய தீவுகளில் வசிக்கின்றன. மூன்று
மீற்றர்கள் நீளமும் 90 கிலோ எடையும்
கொண்ட அவை, பூமி வெப்பமடைதல்
மற்றும் மனித நடவடிக்கைகளால் அவற்
றின் வாழ்விடங்களை இழந்து முற்றாக
அழியும் நிலையில் உள்ளன என்று
மாநாட்டு அறிக்கை எச்சரித்துள்ளது.

மிகையான மீன்பிடி (overfishing) காரண மாகச் சுறா இனங்களில் மூன்றில் ஒரு
பங்கு முழு அழிவுக்கு (extinction) உட்பட்
டுள்ளன என்பதையும் சிவப்பு அறிக்கை
சுட்டிக்காட்டி உள்ளது.

சூழலும் அதன் கட்டமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல் வேறு உயிரினங்களது ஒத்திசைவான வாழ்வில் தங்கியிருக்கிறன.ஆனால் மனித செயற்பாடுகள் காரணமாக சுமார்
138 வகையான உயிரினங்கள் முற்றாக
வும் பாதியாகவும் அழித்துவிட்டன என்று பட்டியலிடப்பட்டுள்ளன. உலகம் இதற்கு
முன் ஐந்து ஊழிகளைச் சந்தித்துள்ளது
என்பதைச் சரித்திர சான்றுகள் கூறுகின்
றன. உயிரினங்களை முற்றாக அழித்
தொழித்த அந்த ஊழிகள் அனைத்துமே இயற்கைப் பேரனர்த்தங்களால் உருவா
னவை. ஆனால் ஆறாவது ஊழி மனித நடவடிக்கைகள் காரணமாக உலகை நெருங்கி வருகிறது என்று சூழலியல்
நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

(படம் :இந்தோனேசியாவில் அழிவின் விளிம்பில் உள்ள ராட்சதப் பல்லி)

குமாரதாஸன். பாரிஸ்.
05-09-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here