பிரான்சு 77 மாவட்டத்தில் ஒன்றான தொர்சி பிரதேசத்தில் மாநகரசபையின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் அனைத்து நாட்டு சங்கங்களின் Forum என்ற நிகழ்வை 04.09.2021 பி. பகல் 13.00 யில் இருந்து நடாத்தியிருந்தனர்;
இந்நிகழ்வில் பிராங்கோ தமிழ்ச்சங்கம் தொர்சி கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், தமிழ் மொழி, கலாசாரம் சம்பந்தமான காட்சிப்பொருட்களையும் தமிழ் இனம் பற்றி நிழற்படங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். கோவிட் நடைமுறைக்கு அமைய இந்நிகழ்வு நடைபெற்றது. பல மக்கள் கோவிட்நடைமுறைக்கு அமைய இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், இளையவர்கள் பங்குகொண்டு தமது இனத்துக்கான பரப்புரையைச் செய்திருந்தனர். கடந்த 2 வருடங்களாக இடம்பெற்ற கோவிட் 19 பேரிடர் பல உன்னத செயற்பாடுகளை முடக்கியிருந்தபோதும் தற்பொழுது படிப்படியாக பழைய நிலைக்கு வந்துகொண்டிருப்பது மிகுந்த சந்தோசத்தை அனைத்துத் தமிழர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.