யாழில் மின்னல் தாக்கியதில் இ.போ.ச பேருந்து சாரதியான இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் உடுப்பிட்டியைச் சேர்ந்த தியாகராஜா மதனபாலன் (வயது 41) என்பவரே உயிரிழந்தார்.
குறித்த நபர் வயலில் உழவில் ஈடுபட்ட போது சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.