வவுனியா பம்பைமடு பகுதியில் கொட்டகை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயதான பாலகன் பலியாகியுள்ளார்.
நேற்று முன்தினம் (30) மாலை குறித்த சிறுவன் தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கொட்டகையின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணடைந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் பம்மைமடு பகுதியைச் சேர்ந்த சுயந்தன் கீர்த்திகன் என்ற ஒன்றரை வயது பாலகனே மரணமடைந்துள்ளார்.