பிரான்சில் இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் நினைவு சுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – 2015

0
261

01ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்திய லெப் கேணல் விக்ரர்(ஒஸ்கா)நினைவு சுமந்த அனைத்துலக ரீதியிலான் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2015 கடந்த 26.07.2015 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு சார்சல் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. P1040755
காலை 9 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினர் திரு. நிமலன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 04.08.1987 பூநகரியில் வீரச்சாவடைந்த படைத்துறைத் தளபதி தேவாவின் மகன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
P1040757
பிரெஞ்சுக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நெதர்லாந்து கிளைப்பொறுப்பாளர் திரு.ஜெயா அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியினை தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினர் திரு.கிருபா அவர்களும் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனக்கொடியினை உதைபந்தாட்டச் சம்மேளனத் தலைவர் திரு.நந்தகுமார் அவர்களும் ஏற்றிவைக்க ஏனைய நாடுகளின் கொடிகளை அந்தந்த நாடுகளின் விளையாட்டுக்கழக பொறுப்பாளர்கள் ஏற்றிவைத்தனர்.
P1040765
கடும் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட கழகங்களின் விபரம் வருமாறு:-
யங் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் சுவிஸ்
தமிழர் விளையாட்டுக்கழகம் நெதர்லாந்து
UK FX லண்டன்
மகாஜனா விளையாட்டுக்கழகம் லண்டன்
LEWISHAM UNITED லண்டன்
நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம் பிரான்சு
தமிழர் விளையாட்டுக்கழகம் 93 பிரான்சு
ஈழவர் விளையாட்டுக்கழகம் பிரான்சு
பாடும்மீன் விளையாட்டுக்கழகம் பிரான்சு
பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம் பிரான்சு
பாரதி விளையாட்டுக்கழகம் பிரான்சு
நாவாந்துறை விளையாட்டுக்கழகம் பிரான்சு

வெற்றிபெற்ற கழகங்களினதும் வீரர்களினதும் விபரம் வருமாறு:-

1ம் இடம் : ஈழவர் விளையாட்டுக்கழகம் பிரான்சு
2ம் இடம் : மகாஜனா விளையாட்டுக்கழகம் லண்டன்
3ம் இடம் : UK FX லண்டன்

சிறந்த விளையாட்டு வீரர்கள்:
நிஷாந் – மகாஜனா விளையாட்டுக்கழகம் லண்டன்
தொம்சன் – ஈழவர் விளையாட்டுக்கழகம் பிரான்சு

இறுதியாட்ட நாயகன்:
கிரிதாஸ் – ஈழவர் விளையாட்டுக்கழகம் பிரான்சு

நிகழ்வின் நிறைவாக வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன், பதக்கங்களும் அணிவித்துவைக்கப்பட்டன.
கொடிகள் இறக்கிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

P1040779 copy.jpg0

P1040819

P1040901

P1040982

P1040991

P1040999

P1050020

P1050024

P1050032

P1050040

P1050047

P1050048

P1050049

P1050060

P1050061

P1050062

P1050066

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here