ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாரிய குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானில் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரிக்கை விடுத்து சில மணித்தயாலங்களில் இந்த குண்டுவெடிக்கு இடம்பெற்றுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை காபூல் விமான நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக ஆப்கான் பொலிஸார் தெரிவித்ததாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 26 ஆம் திகதி ஆப்கானிஸ் தானின் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற இரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 13 அமெரிக்க படையினர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.