பூநகரி சங்குப்பிட்டி கடலில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

0
447

வலையால் சுற்றப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்  ஆண் ஒருவரின் சடலம் சங்குப்பிட்டி கடலில் மிதந்த நிலையில் பூநகரி காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பூநகரி சங்குப்பிட்டி கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் இனங்காணப்பட்டதையடுத்து இன்று கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டது. வலை சுற்றப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட  நிலையில் உருக்குலைந்து சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பூநகரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here