கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட கூட்டமைப்பு பிரமுகர் தம்பிராஜாவின் மகன் திருவளவன் (வயது 19) வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த 23 ஆம் திகதி இரவு தனது மகன் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தம்பிராஜா யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து யாழ்ப்பாண காவல்துறையினர் வெள்ளவத்தை காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனையில் வீடு ஒன்றிலிருந்து திருவளவன் தம்பிராஜா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்டதாக கூறி செய்யப்பட்ட முறைப்பாடு உள்நோக்கம் ஒன்றின் அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.