பிரான்சு தொர்சி நகரசபையில் நகரபிதா Guillaume Le Lay- Felzine ,
நகரசபை உறுப்பினர்களோடு தமிழர் பிரதிநிதி களுடனான சந்தித்திப்பு ஒன்று கடந்த 23/08/2021 திங்கட்கிழமை மாலை 5மணிக்கு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டு பிரிவு பொறுப்பாளர் திரு.பாலகுமார், பிரான்சு தமிழ்இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் ந.நிந்துலன் ஆகியோருடன் தொர்சி பிராங்கோ தமிழ்ச் சங்க பிரதிநிகள், ந.ஜெயசீலன்,
ஜெ .அமிர்தா, ம.சுதாகரன் , இளையோர் அமைப்பைச்சேர்ந்த செல்வன்
ஜெ. நிசாகரன், செல்வி ஜெ.நிசாந்தினி ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நுண்கொல்லி 19 காலத்தில் நீண்டகால இடைவெளியின் பின்னர் நகரபிதாவுடன் மலர்கொத்து வழங்கி வாழ்த்துக்களுடன் சந்திப்பு ஆரம்பமாகியது.
முதலில் பிரங்கோ தமிழ்ச்சங்கம் தொர்சி நகரபிதாவிற்கு
கடந்த 24 வருடங்களாக தமிழ்ச்சோலை பள்ளிக்கு வழங்கும் ஆதரவு குறித்து நன்றி தெரிவித்தும் தொர்சி நகரசபையுடனும் பிரெஞ்சு ,இதர சமூகத்துடனும் செயலாற்ற தொர்சி வாழ் தமிழர்களின் விருப்பத்தினைத் தெரிவித்திருந்தனர்.
நகரபிதா இளையோர்களின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தும்
தொர்சி நகரசபையின் செயல் திட்டங்களை
தமிழ் சமூகத்திடம் கொண்டு செல்ல ஒரு தொடர்பாடலை ஏற்படுத்துமாறும், நகரவிழாக்களில் பங்குபற்றுமாறும் தொர்சி பிராங்கோ தமிழ்சங்கத்திடம் வேண்டிக்கொண்டார்.
இறுதியில் பிரான்ஸ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன்
ந. நிந்துலன், நகரபிதாவிற்கும் நகரசபை உறுப்பினர்களுக்கும் ஈழத்தமிழர்களின் வரலாறும் இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட இனவழிப்பு வரலாற்றை கணனிமூலம் தகவல்களை மிகத் தெளிவாக விளங்கப்படுத்தினார். அதனை அனைவரும் மிகவும் கரிசனையாக கேட்டு விளங்கிக்கொண்டனர்.
நிறைைவாக சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கி சந்திப்பில் கலந்துகொண்டமைக்காக நகரபிதாவிற்கு பிராங்கோ தமிழ்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.