தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு நபர் அல்லது நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்படாதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுகாதார பணிப்பாளரினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியினுள் வீதியில் பயணிக்க கூடிய குழுவினர்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் தெளிவான உத்தரவு ஒன்று வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக எந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு ஊரடங்கு அனுமதி பத்திரம் காவல்துறையினரால் வழங்கப்படாதென காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அத்தியாவசிய சேவை என கூறி பல நபர்கள் காவல் நிலையங்களுக்கு சென்று ஊரடங்கு அனுமதி பத்திரம் கோருவதாக தெரியவந்துள்ளது. இது காவல்துறையினருக்கு நெருக்கடியாக உள்ளதென காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வரும் நபர்களுக்கு அனுமதி பத்திரம் பெற முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தொலைகாட்சியில் கூறியதாக காவல்துறை நிலையத்திற்கு வரும் நபர்கள் தெரிவித்துள்ளனர்.