காபூல் பிரெஞ்சுத் தூதரகம்
அகதி முகாம் போலக் காட்சி
காபூலில் இருந்து பிரெஞ்சுப் படையின
ரால் மீட்கப்பட்ட சுமார் 500 வெளியேறி
கள் அடுத்தடுத்து மூன்று விமானங்களில்
பாரிஸ் வந்தடைந்தனர்.
காபூலில் இருந்து மீட்கப்பட்டோர் முதலில்
அங்கிருந்து இராணுவ விமானங்கள்
மூலம் அபுதாபியில் உள்ள இராணுவத்
தளம் ஒன்றுக்கு கொண்டுவரப்பட்டுப்
பின்னர் அங்கிருந்து பாரிஸ் சர்வதேச
விமான நிலையத்துக்கு (Roissy Charles-
de-Gaulle Airport) அழைத்துவரப்பட்டனர்.
கடந்த இரண்டு தினங்களாக நீடித்த
மீட்பு நடவடிக்கைகளில் ஆப்கானிஸ்தா
னில் தங்கியிருந்த பிரெஞ்சு குடிமக்கள்
பிரெஞ்சு – ஆப்கான் இரட்டைக் குடியுரி
மை பெற்றவர்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் அடங்கிய ஆப்கானிஸ்தான் பிரஜைகள் உட்பட 500 பேர் வெளியேற்
றப்பட்டுள்ளனர். பிரான்ஸின் நகர சபைகள் பலவும் ஆப்கானிஸ்தானில்
இருந்து மீட்கப்படும் அகதிகளைப்
பொறுப்பேற்பதற்கு முன்வந்துள்ளன.
இதேவேளை – உயிர் அச்சுறுத்தலுக்குப் பயந்த நூற்றுக்கணக்கான ஆப்கானியர்
கள் காபூலில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்
தில் தஞ்சமடைந்துள்ளதால் அது ஒர்
அகதி முகாம் போன்று காட்சியளிப்பதாக
செய்திகள் தெரிவிக்கின்றன.
தூதரகப் பணியாளர்களையும் அங்கு தஞ்சமடைந்துள்ளவர்களையும் அங்கி
ருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது
தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுக்
கள் நடத்தப்பட்டு வருவதை பிரான்ஸின்
மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான
ஜெனரல் உறுதிப்படுத்தி உள்ளார்.
அமெரிக்கா இதுவரை 7ஆயிரம் பேரை அங்கிருந்து மீட்டுள்ளது
தலிபான்கள் காபூல் விமான நிலையத் துக்குச் செல்லும் சகல பாதைகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து
தப்பிச் செல்வோரைத் தடுத்து வருகின்
றனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்
றன. இதனால் விமான நிலையச் சூழ
லில் பெரும் குழப்பமான நிலை தொடர்
ந்தும் நீடிக்கிறது.
ஆப்கான் நாட்டு கொடிகளுடன் ஆங்கா
ங்கே மக்கள் சிறு குழுக்களாக தலிபான்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரு
கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்
கின்றன.
தமது எதிராளிகளை – குறிப்பாக வெளி
நாட்டுப் படையினருடன் சேர்ந்து செயற்
பட்ட ஆப்கானியர்களைப்-பழிவாங்கும்
நடவடிக்கைகளைத் தலிபான்கள் ஆரம்
பித்துள்ளனர் என்று ஐ. நா. சபை குற்றம் சாட்டி உள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
20-08-2021