இலங்கையில் நாடளாவிய ரீதியில் கடந்த 16 நாட்களில் 1926 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று
சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே இந்த எண்ணிக்கை காண்பிக்கின்றது. இதற்கமைய கடந்த 1ஆம் திகதி மரணங்களும் 2ஆம் திகதி 74
மரணங்களும், 3ஆம் திகதி 82
மரணங்களும், 4ஆம் திகதி 94
மரணங்களும், 5ஆம் திகதி 98
மரணங்களும், 6ஆம் திகதி 98
மரணங்களும், 7ஆம் திகதி 94
மரணங்களும், 8ஆம் திகதி 111
மரணங்களும், 9ஆம் திகதி 118
மரணங்களும், 10ஆம் திகதி 124
மரணங்களும், 11ஆம் திகதி 156
மரணங்களும், 12ஆம் திகதி 155
மரணங்களும், 13ஆம் திகதி 160
மரணங்களும், 14ஆம் திகதி 161
மரணங்களும், 15ஆம் திகதி 167
மரணங்களும், 16ஆம் திகதி 171
மரணங்களும் பதிவாகின.
இதற்கமைவாக ஒரு மணித்தியாலத்துக்கு 7 கொரோனா மரணங்கள் பதிவாகின்றன என்று தெரிவிக்கப்
படுகின்றது. 8 நிமிடத்துக்கு ஒரு மரணம் பதிவாகின்றது.
இவ்வாறு மரணமடைந்தவர்க ளில் 1,482 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
இதேவேளை, 30 – 59 வயதுக்குஉட்பட்ட 430 பேரும், 30 வயதுக்குகுறைந்த 14 பேரும் மரணமடைந்தனர். கடந்த 16 நாட்களில் 1,101 ஆண்களும், 825 பெண்களும்
கொரோனாத் தொற்றால் இதுவரை மரணமடைந்தனர்.