பயங்கரவாதத்தின் சரணாலயமாக
ஆப்கான் மீண்டும் மாறிவிட கூடாது.
ஏனெனில் பிரான்ஸின் பாதுகாப்புக்கு பெரும்
சவால் என்கிறார் அதிபர் மக்ரோன்.
ஆப்கானியர்கள் ஐரோப்பா நோக்கி
படையெடுப்பதைத் தடுக்க முயற்சி
ஆப்கானிஸ்தான் முன்னர் போன்று பயங்கரவாதத்தின் “சொர்க்கமாக” – “சரணாலயமாக” -மீண்டும் மாறிவிடக் கூடாது. அதை அனுமதிக்க முடியாது.
நாட்டுக்கு ஆற்றிய விசேட தொலைக்
காட்சி உரையில் அதிபர் எமானுவல்
மக்ரோன் மேற்கண்டவாறு தெரிவித்தி
ருக்கிறார்.
பிரான்ஸின் சொந்தப் பாதுகாப்புக்கும் பொது எதிரியான பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கும் ஆப்கானிஸ்தான்
ஒரு முக்கிய சவாலாக மாறியுள்ளது –
என்றும் அவர் குறிப்பிட்டார். “இஸ்லாமி
யப் பயங்கரவாதத்துக்கு எதிராக எல்லா
வடிவங்களிலும் போராடுவதே எங்களது
நடவடிக்கைகள் அனைத்துக்கும் மேலான
-முன்னுரிமையான – செயற்பாடாக இருக்கவேண்டும்” – என்று அவர் கேட்டுக்
கொண்டார்.
ஆப்கானிஸ்தான் நிலைவரம் தொடர்
பாகவும் அங்குள்ள பிரெஞ்சுப் பிரஜை
களை மீட்கும் நடவடிக்கை குறித்தும் நாட்டு மக்களுக்கு நேற்றிரவு அவர்
தனது விடுமுறைக்கால வதிவிடத்தில் இருந்தவாறு உரையாற்றினார்.
சர்வதேச ஸ்திரத்தன்மைக்குச் சவாலான
இந்த விவகாரத்தில் ஒரேவிதமான நலன்
களைக் கொண்ட ரஷ்யா – அமெரிக்கா – ஐரோப்பா- மட்டத்தில் ஒருங்கிணைந்து
நடவடிக்கைகளை எடுப்பதற்கு இயன்ற
அனைத்தையும் செய்வோம் – என்று தெரி
வித்த மக்ரோன், ஆப்கானிஸ்தானில்
இருந்து அடுத்துவரும் நாட்களில் எதிர்பா
ர்க்கப்படுகின்ற குடியேறிகளது பெரும்
படையெடுப்பைத் தடுக்கவும், சட்டவிரோ
தமாக ஆட்களைக் கடத்துகின்ற சக்திக
ளை ஒடுக்கவும் ஐரோப்பிய ஒன்றிய
நாடுகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்
கள் வகுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
குடியேறிகளோடு சேர்ந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளும் ஐரோப்பிய எல்லைகளு
க்குள் ஊடுருவுவது தடுக்கப்படும் என்ற செய்தியைத் தனது உரையில் அவர் கோடிகாட்டினார்.
ஆப்கானிஸ்தானில் நேச நாடுகளுடன்
நிலைகொண்டிருந்த பிரெஞ்சுத் துருப்
பினர், அமெரிக்கா அங்கிருந்து வெளி
யேறுவதற்கு முன்பாகவே 2014 ஆம் ஆண்டில் திருப்பி அழைக்கப்பட்டிருந்
தனர். 2001 முதல் 2014 ஆம் ஆண்டுவரை
யான 13 ஆண்டுகாலப் பகுதியில் அங்கு
தலிபான்களுக்கு எதிரான சண்டைகளில்
பிரெஞ்சுப்படையினர் 90 பேர் உயிரிழந்
தனர்.
தற்போது சுமார் இருபது ஆண்டுகளுக்
குப் பிறகு ஆப்கானிஸ்தான் நாடு கடும்போக்கு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமாகிய தலிபானின் முழு அதிகா ரத்தின் கீழ் வந்துள்ளது. உலகம் முழுவ தையும் அச்சுறுத்துகின்ற அல்கெய்டா, ஐ. எஸ்.எஸ் உட்படப் பல பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் அங்கு பலமாகக் கால் ஊன்றுவதற்கு அது வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அதிபர் எமானுவல் மக்ரோன் அண்மைக் காலத்தில் கொரோனா சுகாதார நெருக் கடி தொடர்பாகவே நாட்டுக்கு அடிக்கடி உரையாற்றி வந்துள்ளார். ஆனால் தனியே ஒரு விசேட உரையை ஆற்ற
வேண்டிய அளவுக்கு பூகோள அரசி
யலில் ஆப்கானிஸ்தான் நிலைமை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்
பது தெரிகிறது.
ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை வரத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டிய
அதிபர் ஜோ பைடன் தனது மௌனத்
தைக் கலைத்து உலகிற்கு அமெரிக்கா
வின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு
முன்பாக – ஐரோப்பாவில் இருந்து மக்ரோ
னின் குரல் வெளிப்பட்டுள்ளது.
மக்ரோனின் உரை நிறைவடைந்து ஒரு மணிநேர இடைவெளிக்குப் பிறகே வெள்ளை மாளிகையில் இருந்து ஜோ பைடன் உரையாற்றினார்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர
வாதம் மேலெழுவது ஒப்பீட்டு அளவில்
அமெரிக்காவை விட ஐரோப்பாவுக்கே
மிகுந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மக்ரோனின் நேற்றைய உரை இந்த
அச்சத்தையே பிரதிபலித்தது.
🔵பைடனின் உரை
ஆனால் பைடனின் உரை ஜரோப்பியத் தலைவர்களின் நிலைப்பாடுகளில் இரு
ந்து மாறுபடுகிறது.நாங்கள் ஒரு நாட்டை
கட்டியெழுப்புவதற்காக நமது படைகளை அங்கு அனுப்பவில்லை. அமெரிக்கா
வுக்கான பெரும் அச்சுறுத்தலை அகற்று
கின்ற ஒரு குறிக்கோளுடன்தான் அங்கு
கால் பதித்தோம். அது நிறைவேறிவிட்
டது – என்று ஒஸாமா பின்லேடனனையும்
அல்கெய்டாவையும் அடக்கி ஒழித்த வர
லாறை மட்டுமே பைடன் தனது உரையில்
முதன்மைப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானின் அரசும் அந்த மக்களும் இராணுவமும் தலிபான்களை
எதிர்க்காதபோது நாங்கள் மட்டும் எதற் காக அங்கு நிண்டு சண்டையிடவேண் டும் என்று கேள்வி எழுப்பினார் பைடன்.
அமெரிக்கப் படை வெளியேற்றத்தை
“மிகச்சிறந்த முடிவு” என்று திரும்பத்
திரும்ப குறிப்பிட்ட அவர்,ஆப்கானிஸ்தா
னின் எதிர்காலம் குறித்து எந்த விடைக
ளையும் உலகத்துக்குக் கூறவில்லை.
மேற்கின் உலக ஒழுங்கையும் பூகோள
அரசியலையும் ஆப்கானிஸ்தான் ஆட்டங்
காணச் செய்திருப்பதன் விளைவையே
தலைவர்களது உரைகள் வெளிக்காட்டுகின்றன.
- பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
17-08-2021