மட்டக்களப்பினில் முச்சக்கர வண்டி தீவைப்பு!

0
157

theeகிழக்கினில் தேர்தல் வன்முறைகள் சூடுபிடித்துள்ள நிலையினில் மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

மாமாங்கம் இரண்டாம் குறுக்கு வீதியில் உள்ள சு.பாலச்சந்திரன் என்பவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு 11.00மணிளவில் வீட்டுக்கு முன்பாக ஒளி தெரிவதைக்கண்டு வெளியில் வந்து பார்த்தபோது முச்சக்கர வண்டி எரிந்துகொண்டிருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி தானாக எரிய சந்தர்ப்பம் இல்லையெனவும் யாரோ இந்த சதியை செய்திருக்கவேண்டும் எனவும் முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து ஸ்த்தலத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here