
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்து
கின்ற பொறுப்பைக் கையளிக்கின்ற உத்தியோகபூர்வ நிகழ்வு ரோக்கியோ – பாரிஸ் நகரங்கள் இடையே நாளை நடைபெறவிருக்கின்றது. அதனை முன்னிட்டு பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மிகப் பெரிய அளவிலான ஒலிம்பிக் கொடி ஏற்றப்படவுள்ளது.
ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின்
நிறைவு நிகழ்வு ஆரம்பமாகின்ற நேரத்
தில் – பிரான்ஸ் நேரப்படி மதியம் ஒரு
மணியளவில் – ஒலிம்பிக் கொடியேற்று
கின்ற வைபவம் பாரிஸில் ஆரம்பமாகும்.
தொழில்நுட்ப ரீதியான சாதனையாக
சுமார் 5ஆயிரத்து 800 சதுர அடி கொண்ட
பிரமாண்டமான கொடியினை பாரிஸ்
நகர மேயர் ஆன் கிடல்கோ ஈபிள் கோபு
ரத்தில் ஏற்றிவைப்பார். அச்சமயம் விமா
னப்படையின் சுதந்திர தின அணிவகுப்பு
(Patrouille de France) விமானங்கள் கோபு
ரத்தின் மேலே அணிவகுத்துப் பறக்
கின்ற கண்காட்சியும் இடம்பெறும் என்று
அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோபுரத்தின் சூழலில் இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்
பெறவுள்ளன.
உதைபந்தாட்ட மைதானத்தின் பரப்பள
வுக்கு நிகரான பாரிய ஒலிம்பிக் கொடி
சுமார் ஆறு லட்சம் லீற்றர் ஹீலியம்
(helium) வாயு நிரப்பப்பட்ட பாய்மரத் துணியினால் தயாரிக்கப்பட்டது என்ப
தால் அது ஒரு முக்கிய தொழில்நுட்ப சாதனையாகவும் குறிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்
பாரிஸ் நகரத்தில் இடம்பெறவிருப்பது
தெரிந்ததே. அதற்கான பாரிய திட்டமிடல்
கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.
(படம் :கோபுரத்தில் ஒலிம்பிக் கொடி
பரீட்சார்த்தமாகப் பறக்கவிடப்பட்ட காட்சி)
குமாரதாஸன். பாரிஸ்.
07-08-2021