கட்டாய தனிமை, தொழில் பறிப்பு
இரண்டையும் அது நிராகரித்தது
அரசினால் முன்வைக்கப்பட்ட புதிய
சுகாதாரச் சட்டத்தை நாட்டின் அதி உயர் நீதி பீடமாகிய அரசமைப்புச் சபை (le Conseil constitutionnel) சில திருத்தங்களு
டன் ஏற்றுக்கொண்டுள்ளது. வைரஸ்
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவரை
பொலீஸ் கண்காணிப்புடன் பத்து நாட்
கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைத்
திருத்தல், சுகாதாரப் பாஸ் வைத்திருக்
காத காரணத்துக்காகப் பணியாளர் ஒருவரது வேலை ஒப்பந்தத்தை (contracts) ரத்துச் செய்வதற்குத் தொழில் வழங்குநருக்கு அதிகாரம் அளிப்பது ஆகிய இரண்டு விதிகளைத் தவிர பெரும்பாலான ஏனைய விதிகள் அனைத்தையும் அரசமைப்புச்சபை உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி
ஏற்றுவதைக் கட்டாயமாக்குதல், உணவக
ங்கள், சினிமா, வணிக நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல
வும் நீண்ட தூர ரயில் பயணங்களுக்கும் சுகாதாரப் பாஸைக் கட்டாயமாக்குகின்ற
விதிகள் உட்பட சர்ச்சைக்குரிய ஏனைய பல விதிகளை அரசமைப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. மருத்துவமனை
களுக்குள் செல்வோருக்கும் பாஸ் அவசி
யம் என்ற விதியும் ஏற்றுக்கொள்ளப்பட்
டிருக்கிறது.
சுகாதாரப் பாஸைக் காரணம் காட்டித்
தொழிலைப் பறிப்பதை அரசமைப்புச் சபை தடுத்துள்ள போதிலும் பாஸ் வைத்
திருக்காத காரணத்துக்காக பணியாளர்
ஒருவர் பணியில் இருந்து சம்பளம் இல்லாமல் இடைநிறுத்தப்படுவதற்குச்
சட்டத்தில் இடம் உள்ளது.
தொற்று நோயையும் தனிமனித அடிப்
படைச் சுதந்திரங்களையும் ஒரே தட்டில்
வைத்து மதிப்பிடவேண்டிய ஒரு நெருக்
கடியான நிலையில் சுகாதாரச் சட்டங்கள்
நாட்டின் அரசமைப்புச் சட்டங்களை மீறு
கின்றனவா என்ற கேள்விகளுக்கு பதில்
வழங்கும் பெரும் பொறுப்பு அரசமைப்புச்
சபையிடமே உள்ளது. அந்த வகையில்
மக்ரோன் அரசின் தொற்று நோய்த்தடு
ப்பு முகாமைத்துவம் தொடர்பில் அதன் இன்றைய தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவத்
துடன் எதிர்பார்க்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்
பட்ட சுகாதாரச் சட்ட விதிகளைப் பரிசீலிப்பதற்கு ஒன்பது நீதியரசர்கள்
கொண்ட அரசமைப்புச் சபை வழமை
யாக ஒருமாத காலத்தை எடுப்பது வழக்
கம். ஆனால் இம்முறை டெல்ரா வைரஸ் தொற்றின் தீவிரம்கருதி – அரசமைப்பில் உள்ள சில சரத்துகளின் அடிப்படையில் – அவசரமாக எட்டு நாட்களில் பரிசீலித்துத் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
“சட்ட விதிகள் பொதுச் சுகாதாரத்துக்கும்
தனிமனித உரிமைகளுக்கும் இடையே
சமச்சீரான பரிமாற்றங்களைக் கொண்
டுள்ளன” – என்று அரசமைப்புச் சபை
அதன் தீர்ப்பில் கூறியுள்ளது. மக்களது
சுகாதாரப் பாதுகாப்பைப் பேணுவதன்
ஊடாக அரசமைப்பை மதிக்கும் வழி
முறையையே நாடாளுமன்றம் முன்னெ
டுத்துள்ளது என்றும் அது சுட்டிக்காட்டி
உள்ளது.
சுகாதாரச் சட்டம் அரசமைப்புச் சபையால்
ஏற்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை
அடுத்து அந்தச் சட்ட விதிகள் முன்னர் அறிவித்தவாறு எதிர்வரும் 9 ஆம்திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
கட்டாய தடுப்பூசி, கட்டாய சுகாதாரப் பாஸ் என்பவற்றை உள்ளடக்கிய இந்தப் புதிய சுகாதாரச் சட்டத்துக்கு எதிராக
நாடளாவிய ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்
கள் நடைபெற்று வருகின்றன. கடைசி
யாகக் கடந்த சனியன்று இடம்பெற்ற
ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது இரண்டு
லட்சம் பேர் கலந்து கொண்டனர். புதிய சட்டத்தை “சுகாதார சர்வாதிகாரம்” என்று
கூறிக் கடுமையாக எதிர்த்து வந்தவர்கள்
அதன் மீதான அரசமைப்புச் சபையின்
தீர்ப்பை ஆவலாக எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் தீர்ப்பு அவர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
- பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
05-08-2021