திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு: பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!

0
475

பங்களாவில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதில் குறைந்
தது 17 பேர் உயிரிழந்தனர் எனச் செய்தி
கள் வெளியாகி உள்ளன.

நாட்டின் வட மேற்குப் பகுதியில் பத்மா
நதிக்கரையில் படகு ஒன்றில் பயணித்த
திருமணக் குழுவினரே மின்னல் தாக்கு
தல்களுக்கு இலக்காகினர். மணமகன் சகிதம் மணப் பெண்ணின் இல்லத்துக்
குப் படகில் சென்றவர்களில் 17 பேரே
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தனர்
என்று கூறப்படுகிறது மணமகன் உட்பட காயமடைந்த 14 பேர் மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டனர் என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.

கடும்மழை பெய்துகொண்டிருந்தபோது
திருமணக் குழுவினர் ஷிப்கஞ்ச் Shibganj நகரில் ஆற்றுக் கரையை அண்மித்த வேளையில் மின்னல்கள் அவர்களைத்
தாக்கின என்று கூறப்படுகிறது.

இந்தியாவைப் போன்று பங்களாதேஷ்
நாட்டிலும் ஆண்டுதோறும் இடி மின்னல்
தாக்குதல்களில் நூற்றுக் கணக்கானோர்
உயிரிழக்கின்றனர்.2016 இல் பங்களா
தேஷ் அரசு மின்னல் தாக்குதல்களை
இயற்கைப் பேரழிவாகப் பிரகடனம் செய்தது. அந்த ஆண்டு மே மாதத்தில்
மட்டும் 200 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்
தனர்.

அங்கு காடுகள் குறிப்பாக உயர்ந்த மரங்கள் அழிக்கப்பட்டு வருவதே மின்
னல் தாக்குதல்கள் அதிகரிப்பதற்குக்
காரணம் என்று கூறப்படுகிறது.உயர்ந்த
மரங்கள் இடிமின்னல் மின் வீச்சை
வானத்திலேயே தடுத்து விடுகின்றன.

பருவநிலை மாற்றம் காரணமாக பூமியும்
வளிமண்டலமும் வெம்பமடைந்து வரு
வதால் உலகின் பல பகுதிகளிலும்
இடி மின்னல்கள் தீவிரமாகத் தாக்கத்
தொடங்கியுள்ளன என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்.
05-08-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here