டாக்டர் அப்துல் கலாம் காலமானார்!

0
138

9speechlecture1016இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மாரடைப்பு காரணமக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இராணுவ மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (27) இரவு சற்று நேரத்திற்கு முன்னர் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 83 ஆகும்.

1931 ஒக்டோபர் 15ஆம் திகதி பிறந்த இவரின் முழுப் பெயர் அவுல் பாகிர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here