அகதிகள், புகலிடம் கோருவோருக்கு விரைவாகத் தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு!

0
130

அகதிகள்,புகலிடம் கோருவோர் மற்றும் தொழில் நிமித்தம் தங்கியுள்ள குடியேறி
களுக்கு தடுப்பூசி ஏற்றுவதை விரைவாக
முன்னெடுக்குமாறு சுகாதார அதிகாரிக
ளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் சாதாரண மக்கள் தொகையின
ருடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு அக திகள் மற்றும் புகலிடம் கோருவோரிடை
யே தடுப்பூசி ஏற்றியோரின் வீதம் குறை
வாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே அவர்களுக்கு ஊசி ஏற்றும் பணிகளை விரைவாக இம்மாத
இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அதிகா
ரிகள் கேட்கப்பட்டுள்ளனர். குடியேறிகள்
தங்கியுள்ள இடங்களிலும் அகதிகளை
வரவேற்கின்ற நிலையங்களிலும் உள்ள
வர்களுக்கு நடமாடும் தடுப்பூசி வசதிகள்
மூலம் ஊசி ஏற்றும் பணியை துரிதப்ப
டுத்துமாறு குடியுரிமைகளுக்கான அமை
ச்சர் மார்லின் ஷியப்பா(Marlène Schiappa)
பொலீஸாருக்கும் பிராந்தியங்களது சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும் உத்தர
விட்டுள்ளார்.

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கை யாளர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவதற் கான நடவடிக்கைகளை முன்னெடுப்ப
தற்கு பிரான்ஸின் குடிவரவு மற்றும் அகதிகள் ஒருமைப்பாட்டு அலுவலகத்
துக்கு (l’Office français de l’immigration et de l’intégration-OFII) அதிகாரம் வழங்கப்பட்டு
ள்ளது.

மொழிப் பிரச்சினை, இணைய சாதனங்
கள் ஊடாகத் தடுப்பூசிக்கான இடங்கள், கால நேரங்களைப் பெற்றுக் கொள்ளு கின்ற வசதிகள் இல்லாமை போன்ற கார
ணங்களால் அகதிகள் தடுப்பூசி ஏற்றமுடி
யாத சூழ்நிலைகளில் வாழ்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
04-08-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here