ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUFF) ஏற்பாடு செய்துள்ள மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் நாடாளுமன்ற வீதியை நோக்கி செல்ல முற்பட்ட வேளையில் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் குறித்த வீதிக்குள் பிரவேசிப்பதற்கு பொலிஸார் அனுமதி வழங்காததைத் தொடர்ந்து இந்நிலை ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜகிரியாவைச் சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலவச கல்வியை அழிக்கும் வகையிலான, கல்வியை இராணுவ மயப்படுத்தும் கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வார்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படுவதாக அதில் பங்குபற்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
78 பல்கலைக்கழக சட்டமூலத்தை இராணுவ பலத்தினால் தூக்கியெறியும் கொத்தலாவல சட்டமூலத்தை தோற்கடிப்பதற்காக தாங்கள் அணிதிரண்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.