அதிபர் மக்ரோன் பிரான்ஸின் தெற்கு கரையோர மாவட்டமான Var இல் உள்ள குடியரசுத் தலைவரது ஓய்வுகால வசிப் பிடத்தில் தனது கோடை விடுமுறையைக் கழித்து வருகிறார். அங்கிருந்தவாறு அவர் தனது இன்ஸ்ரகிராம்(Instagram)
சமூக வலைத் தளம் ஊடாகத் தோன்றி
கேள்விகளுக்கு பதிலளிக்கும் முயற்சி
யில் ஈடுபட்டுள்ளார்.
அவர் கறுப்பு ரீ-சேர்ட் அணிந்து இன்ஸ்ர
கிராம் திரையில் தோன்றும் காட்சிகளை
ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தடுப்பூசி தொடர்பான கேள்விகளை
முன்வைத்தால் தன்னால் இயன்றவரை
தெளிவான பதில்களை வழங்க முடியும்
என்று அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
“தடுப்பூசி தொடர்பாக உங்களில் பலர் இன்னமும் ஆச்சரியப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். பலர் மத்தியில் அச்சம் உள்ளது. பொய்யான
தகவல்கள், வதந்திகள் காரணமாக பல
ரிடம் கேள்விகள் எழுகின்றன.அவற்று
க்கு பதில் கூறப்படவேண்டும். எனவே
தான் உங்களது கேள்விகளுக்கு நியாய
மான பதில்களை நேரடியாக வழங்குவ தற்கு முடிவு செய்தேன். கேள்விகளை
என் முன்வையுங்கள் நேரடியாகத் தெளி
வான பதில்களைத் தருகிறேன்.. “- என்று
மக்ரோன் இன்ஸ்ரகிராமில் தோன்றித் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றுவதில் ஆர்வம் இன்றிக்
காணப்படுகின்ற இளையவர்களை
ஊக்குவிப்பதற்காகவே அவர் சமூக
ஊடகத்தின் மூலம் அவர்களை அணுகு
கின்ற முயற்சியில் இறங்கியுள்ளார்
என்று கருதப்படுகிறது.”இளையவர்கள்
தங்களுக்காகவும் அடுத்தவர்களுக்காக
வும் தடுப்பூசி போட முன்வர வேண்டும்
என்று அவர் பகிரங்கமாக அழைப்பு
விடுத்தார்.
🔵இளம் வயது. நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன். வைரஸின் தீவிரமான
தாக்கம் ஏற்படவில்லை. எதற்காக நான்
ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்?
மக்ரோனின் கேள்வி – பதிலில் இணைந்துகொண்ட நல்ல ஆரோக்கியம் உள்ள இளையவர் ஒருவரால் எழுப்பப்
பட்ட கேள்வி இது.
🔵மக்ரோன் :அது நிச்சயமல்ல. ஆரோக்
கியமான இளவயதினர் பலரும் கூட
ஆஸ்பத்திரிகளில் படுக்க வேண்டிய
கட்டம் வந்திருக்கிறது. வைரஸ் தொற்று
உடனடியாக இப்போது உங்களுக்கு தீவிர
அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்
கலாம். ஆனால் நாட் செல்லச் செல்ல
நீண்ட காலத் தாக்கம் பல சோர்வுகள்,
மூச்சுப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அதனை long Covid என்கிறோம். இளவயதினர் பலர் அவ்வாறு நீண்ட
காலப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
உங்களுக்காக அல்ல உங்கள் வீட்டில்
இருக்கின்ற ஏனையோருக்காக ஊசி
போடுங்கள். ஏனெனில் உங்களில்
இருந்து வைரஸ் ஏனையவர்களுக்குத்
தொற்றுவதைத் தடுப்பூசி குறைக்கின்
றது.
-இவ்வாறு மக்ரோன் பதிலளித்தார்.
பிரான்ஸில் நாடெங்கும் டெல்ரா தொற்றுக்கள் காரணமாக மருத்துவ
மனைகளின் அதிதீவிர சிகிச்சைப்
பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரது
எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத்
தொடங்கி உள்ளது. அதேசமயம் தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் சட்டத்
துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடெங்கும்
மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மூன்றாவது வாரமாகக் கடந்த சனியன்று
நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணிகளில்
இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
02-08-2021