நல்லூர் உற்சவ காலத்தில் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தருபவர்கள் இறுக்கமான ஆடைகளை அணியாது பண்பாட்டுடைகளுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நல்லூர் உற்சவ காலத்தில் பல்இனத்தவர்களும் வருகை தருவது மட்டுமல்லாது நல்லூரின் புனிதத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டியதொன்று.ஆகவே இங்கு வருகை தருபவர்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து வருவதால் நல்லூரின் புனிதத்தன்மைக்கு களங்கம் ஏற்படுகின்றன.
எனவே கடந்த முறையும் பண்பாட்டுடைகளுடன் வாருங்கள் என்றவாறு எழுதி விழிப்புணர்வு பதாகைகள் நல்லூர் ஆலயத்தின் அனைத்து மருங்கிலும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை பண்பாட்டுடைகளுடன் வாருங்கள் என்று எழுத்தால் மட்டுமல்ல படங்களாலும் வரைந்து மக்களுக்கு தெளிவாக விழிப்பூட்டும் வகையில் பதாகைகளை நல்லூர் ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என்று யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.