வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று (02) யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்துக்கு தமது பணிகளை பொறுப்பேற்க அனுமதிக்குமாறு கோரியே தாம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் சுமார் 150 நாட்களுக்கு மேலாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.