இவ்வாண்டு வயல்மாதா (காட்டுமாதா) கோவிலில் அமைதியின் அரசி பெருவிழா (15/08/2021) கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக நடைபெறாது என்று ஆலயப் பங்குத் தந்தையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முழு விபரம் வருமாறு:-
அன்பானவர்களே, இவ்வாண்டு வயல்மாதா கோவிலில் அமைதியின் அரசி பெருவிழா (15/08/2021) கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக நடைபெறாது.
மேலும், முதல் சனிக்கிழமை மாலையிலும் மறு அறிவிப்பு வரும் வரை இக்கோயிலில் தமிழ்த் திருப்பலி நடைபெறூது.
இனி வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வயல்மாதா கோவிலுக்கு வர விரும்புவோர் 1. கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழ் அல்லது 2. PCR Negative சான்றிதழ் அல்லது 3. Antegenique negative சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தவறுவோர் காவல் துறையினர் கண்காணிப்பில் எந்நேரத்திலும் பிடிபட்டால் அதற்கான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவும் பாதுகாப்பாக அனைவரும் வாழ அன்னையிடம் மன்றாடவும் அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
தந்தை பிரிட்டோ பாண்டியன்,
போந்துவாசு மறைமாவட்டம்.