இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள,
பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகப் பகுதிகளாகிய மார்ட்டினிக்(Martinique) ரியூனியன்(Réunion) ஆகிய தீவுகளில் வைரஸ் பரவல் மிகத் தீவிரமாக
அதிகரித்துள்ளது.
பிரான்ஸின் பெரு நிலப்பரப்புடன் ஒப்
பிடுகையில் தடுப்பூசி ஏற்றியோர் வீதம் மிகக் குறைவாக உள்ளதால் அந்தத் தீவு
களில் வைரஸின் நான்காவது அலை
மருத்துவமனை நெருக்கடிகளை உருவா
க்குகின்ற அளவுக்குத் தீவிரமடைந்துள்
ளது. மருத்துவமனைகளில் சேர்க்கப்படு வோரில் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றாத – இளவயதினர்- என்ற தகவலை
மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மார்ட்டினிக் தீவின் மருத்துவமனைகளில்
இடநெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அவசர
நோயாளிகளை அங்கிருந்து பாரிஸ்
மருத்துவமனைகளுக்கு இடமாற்றுகின்ற
பணி சனிக்கிழமை தொடங்கவுள்ளது.
தலைநகர் Fort-de-France மருத்துவமனை
யில் இருந்து மூன்று அவசர நோயாளி
கள் மருத்துவ விமானம் மூலம் பாரிஸ்
ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டுவரப்பட
வுள்ளனர். இராணுவ மருத்துவப்பிரிவின் ஐம்பது வீரர்கள் அடங்கிய குழுவினர் அங்கு மருத்துவப் பணிகளில் உதவி
வருகின்றனர்.
மார்ட்டினிக் தொற்று எண்ணிக்கை ஒரு
லட்சம் பேருக்கு ஆயிரம் என்ற அளவை
எட்டி உள்ளது. அது இதற்கு முன் எங்கும்
பதிவாகாத மிக உயர்ந்த வீதம் ஆகும். அங்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் அடுத்த மூன்று வார காலப்பகுதிக்கு இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள்,அருந்தகங்கள், வணிக நிலையங்கள் இரவில் மூடப்படவுள்ளன.
தொற்று எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 350 என்ற வீதத்தை எட்டி உள்ள
தால் ரியூனியன் தீவில் பகுதியாக பொது
முடக்கக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு
ள்ளன.அடுத்த இரண்டு வார காலத்துக்கு
மாலை 18 மணிமுதல் மறுநாள் காலை 05
மணிவரை மிக இறுக்கமான ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பெரும் சுற்றுலா மையங்களான இந்த தீவுகளில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி நிலை வரம் கோடை விடுமுறைக்காக அங்கு செல்கின்ற வெளி நாட்டு உல்லாசப் பயணிகளுக்குச் சவால்களை ஏற்படுத்தி உள்ளது.
இதேவேளை – பிரான்ஸில் டெல்ரா வைரஸ் தொற்றுக்கள் நாளாந்தம் அதிகரித்து வருவதால் நாட்டின் 26 மாவட்டங்களில் வெளி இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதியை உள்ளூர் நகர நிர்வாகங்கள் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவந்துள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.
29-07-2021