சேவல் குஞ்சுகளை பிரித்து அழிக்கும் கொடுமைக்கு பிரான்ஸில் இனி தடை!

0
224

ஆதாயத்தின் முன்னால் அற்பமாகும்
பிஞ்களின் உயிர்….

முட்டைப் பண்ணைகளில் பொரித்த கையோடு சேவல் குஞ்சுகளை வேண்டத் தகாதவையாக இனப்பாகுபடுத்திப் பிரித்துக் கொல்கின்ற நடைமுறை அடுத்த ஆண்டு (2022)ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் தடைசெய்யப்படுவதாக
பிரான்ஸ் அறிவித்திருக்கிறது.

பொரித்த குஞ்சுகளில் ஆண் இனத்தை
வகை பிரித்துக் கொல்லுகின்ற(crushing and gassing of male chicks) நடைமுறையை
இல்லாதொழிக்கின்ற முதல் நாடு என்ற
பெருமை இதன் மூலம் பிரான்ஸிற்குக் கிடைக்கிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இதனைப் பின்பற்றித் தடைகளை அறிவிக்க வேண்டும் என்று பிரான்ஸின் விவசாய அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இறைச்சி மற்றும் முட்டை மீதான நுகர்வு வெறியால் பறவைகள் விலங்குகள் மீது மனிதனால் புரியப்பட்டுவருகின்ற வன் கொடுமைகள் விவரிக்க முடியாதவை.

பெரும் தொழிற்சாலைகள் போன்ற கோழி முட்டைப் பண்ணைகளில் நிகழும்
கொடுமைகள் முட்டையையும் இறைச்
சியையும் ரசித்துப் புசிக்கின்றவர்களது
கண்களுக்குக் காலாதி காலமாக மறைக் கப்பட்டே வருகின்றன.

பொரித்து ஓரிரு நாட்களேயான கோழிக் குஞ்சுகளில் ஆண் குஞ்சுகளைத் தெரிவு செய்து அவற்றை நசித்தும் நச்சுப் புகை யூட்டியும் கொல்லுகின்ற கொடுமையை
உலகம் எந்த உறுத்தலும் இன்றி அனுமதி
த்துவிட்டுள்ளது. பெரும் பண்ணைகளில்
வணிக நோக்கில் மிகையாகப் பொரிக்க
வைக்கப்படுகின்ற குஞ்சுகளில் ஆண்
குஞ்சுகளால் ஆதாயம் ஏதுமில்லை எனக்
கருதி அவை ஒதுக்கப்பட்டுக் கொத்தாகக் கொல்லப்படுகின்றன. முட்டையிடுகின்ற பெண் குஞ்சுகளுக்கே அங்கு மவுசு. லாபம் இல்லையேல் உயிருக்கு எங்கும் மதிப்பேதும் இல்லை என்ற நிலை.

பிரான்ஸில் மட்டும் ஆண்டு தோறும் இவ்வாறு நசித்துக் கொல்லப்படுகின்ற ஆண் குஞ்சுகளின் எண்ணிக்கை ஐம்பது மில்லியன்கள் ஆகும்.

குப்பையைப் போல குஞ்சுகள் வாரிக்
குவிக்கப்பட்டு இயந்திரங்களுக்குள்
கொட்டி நசுக்கப்படுகின்ற – மனதை உருக்கும்-காட்சிகள் அவ்வப்போது வெளியே தெரிய வந்தாலும் உலகம் அந்த உயிர்க் கொலைகளைக் கணக்கில் எடுப்பதே இல்லை. மாமிச வெறியும் வணிக லாப நோக்கங்களும் மனித குணாம்சங்களை அடியோடு மாற்றி
விட்டுள்ளன.

பிறந்த குழந்தைகளை மறுநாளே இப்படி நசித்துக் கொல்ல மனித மனம் இடம் கொடுக்குமா?-இவ்வாறு கேள்வி எழுப்பு
வோர் இந்தக் கொடுமையை நிறுத்துவ
தற்காக ஓயாமல் குரல் கொடுத்து வருகி
ன்றனர்.

விலங்குகள்,பறவையினங்களது உரிமை
களை மதிக்குமாறு கேட்டுப் போராடும்
அமைப்புக்களது இடைவிடாத கோரிக்
கைகளை ஏற்றுக் கோழிக் குஞ்சுகள் மீதான இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக பிரான்ஸ்
அரசு அறிவித்திருக்கிறது.

குஞ்சுகள் பொரித்த பிறகு அது பேடா சேவலா என்று தரம்பிரித்துக் கொல் லுகின்ற தற்போதைய நடைமுறைக்கு மாற்றாக முட்டைக்குள் கருவாக உள்ள நிலையிலேயே ஆண் குஞ்சுகளை இனங்கண்டு அந்த முட்டைகளை ஒதுக்கிவிடுகின்ற நவீன தொழில்
நுட்ப முறைகளைப் பின்பற்றுமாறு முட்டைப் பண்ணையாளர்கள் கேட்கப்
பட்டுள்ளனர்.

கருவில் ஆண் கோழிக் குஞ்சுகளை அறி
கின்ற முறை “direct-in-the-egg sexing techniques” எனப்படுகிறது. முட்டைக்
கோது மீது நுண் துளையிட்டுச் செய்யப்
படுகின்ற இயந்திரத் தொழில்நுட்பப் பரிசோதனை முறை அது. ஆனால் இந்த நவீன நடைமுறை பெரும் நிதி மற்றும் கால விரயம் மிகுந்தது என்று பண்ணை யாளர்கள் கருதுகின்றனர். இதனால் முட்டை விலையை அதிகரிக்கவேண்டி வரும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொழில் நுட்பங்கள் மூலம் விலங்குகள் பறவைகளைக் கருவிலேயே ஆண் பெண் என இனப்பாகுபடுத்தி வகை பிரி க்கின்ற முறைகளையும் விலங்கு உரிமை
பேணும் அமைப்புகள் எதிர்க்கின்றன.

பிறந்த பிறகு கொல்வதோ அல்லது கருவில் கண்டறிந்து அழிப்பதோ அது
எதுவாக இருந்தாலும் உயிரினங்களது
உரிமைகளை மீறுகின்ற எந்த வடிவத்
திலான கொடுமைகளையும் அனுமதிக்க
முடியாது என்று L214 போன்ற அமைப்பு
கள் வாதிடுகின்றன.

பூமியின் வெப்பமும் கால நிலையின்
கோரத் தாண்டவங்களும் அதிகரித்துவ
ருவதற்குக் கால்நடைகளும் கோழிகள் போன்ற பறவைகளும் வகை தொகை
இன்றி இனப்பெருக்கப்படுவது ஒரு
முக்கிய காரணம் என்று அறிவியலாளர்
கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

மனிதர்களது மாமிச நுகர்வு வெறி குறை
க்கப்படவேண்டும். அல்லது மாற்று உயிரி
யல் வழி முறைகளில் இறைச்சியைத் தயாரிக்கின்ற தொழில் நுட்பங்கள் கண்ட
றியப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

         - பாரிஸிலிருந்து குமாரதாஸன். 
                                                     26-07-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here