சிறிலங்கா இனவெறிக் காடையர்களினால் 1983 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை 23 தமிழினப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சின் புறநகர் பகுதியான நெவ்வர் நகரில் இடம்பெற்றது. நெவ்வர் தமிழ்ச் சங்கத்தினதும், நெவ்வர் தமிழ்ச்சோலையினதும் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.