ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் யாழ்.மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்!

0
355

அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில்
அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர்
ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்
படுத்தப்பட்டுள்ளது.

மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்
பட்ட North Rhine-Westphalia மாநிலத்தில்
euskirchen என்ற இடத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளது தந்தையான இராசரத்தினம் இலக்குமணன் என்ற 36 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரி ழந்தவராவார்.

கடந்த 15 ஆம் திகதி அவர் வெள்ளத்தில் சிக்குண்டார் என்பது தெரியவந்துள்ளது.
வீட்டில் தனித்திருந்த சமயம் வெள்ளம்
பெருகி வருவது கண்டு அவர் தனது முக்கிய சில ஆவணங்களை எடுத்துக்
கொண்டு பாதுகாப்புத் தேடுவதற்காக
வீட்டுக்கு வெளியே ஓடிவந்தார் என்றும்
அச்சமயம் வெளியே பெருக் கெடுத்த வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட கார் ஒன்றுடன் மோதுண்ட அவர் பின்னர்
காணாமற்போனார் என்றும் சம்பவத்தை
நேரில் கண்ட சிலர் கூறியுள்ளனர்.

வெள்ளப் பகுதி ஒன்றில் இருந்து மறுநாள் அவரது சடலம் கண்டெடுக்கப்
பட்டது. அவரது கையில் பச்சை குத்தி இருந்தமையால் அதன் மூலம் சடலம் அடையாளங்காணப்பட்டது என்ற தகவலை ஜேர்மன் தமிழ் வட்டாரங்கள்
வெளியிட்டன.

ஜேர்மனியில் வெள்ளம் பாதித்த மேற்குப் பகுதிகளில் பல தமிழர்களும் சிக்குண்ட
னர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. எனினும் அங்கு நேர்ந்த ஓர் உயிரிழப்பு பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட முதல் தகவல் இதுவாகும்.

ஜேர்மனியின் அண்மைக்கால வரலாற் றில் ஏற்பட்ட மிக மோசமான இந்த இயற்கை அழிவில் சிக்கிக் காணாமற் போன பலரது உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.பருவ மாற்றத்தால் ஏற்பட்ட இந்த இயற்கையின் சீற்றம் அங்கு சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

குமாரதாஸன். 23-07-2021
பாரிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here