தமிழினக் கொடூர அழிப்பின் 32 ஆவது ஆண்டு கறுப்பு யூலை நினைவுக் கவனயீர்ப்பு போராட்டம் 25.07.2015 சனிக்கிழமை பிரான்சு பாரிஸ் Trocadéro பகுதியில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடுசெய்த இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமிழினப் படுகொலை தொடர்பிலான பதாதைகள், தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறும் கடும் வெய்யிலுக்கு மத்தியில் நின்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செயற்பாட்டாளர்களின் கண்டன உரைகள் இடம்பெற்றதுடன் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
பல வெளிநாட்டவர்களும் எமது போராட்டம் பற்றிக் கேட்டுத் தெரிந்ததுடன், தமது ஆதரவை எமது மக்களுடன் பகிர்ந்து சென்றதையும் காணமுடிந்தது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத்தொடர்ந்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.