பிரான்ஸின் இரும்புச் சீமாட்டி ஈபிள் கோபுரம் நேற்று முதல் மீண்டும் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்
பட்டது. மாஸ்க் மற்றும் சுகாதாரப் பாஸ் என்பவற்றுடன் வரும் 21 ஆம் திகதி முதல் கோபுரத்தை பொதுமக்கள் பார்
வையிடமுடியும்.
கொரோனா தொற்று நோய் நெருக்கடி
காரணமாகக் கடந்த ஆண்டு ஒக்ரோபர்
30 ஆம் திகதி முதல் – தொடர்ந்து ஒன்பது
மாதங்கள்-கோபுரம் மூடப்பட்டிருந்தது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் இவ்வாறு கோபுரம் மிக நீண்ட காலப் பகுதிக்கு மூடப்பட்டமை இதுவே முதல் முறை ஆகும்.
பிரான்ஸில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்களில் சுகாதாரப் பாஸ் கட்டாயமாக் கப்பட்டிருப்பதால் ஈபிள் கோபுரத்தின் ரசிகர்களுக்கும் அது கட்டாயம் ஆகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் தனித்தனியே இரண்டு பிரிவுகளாக கோபுரத்தில் ஏறுவதற்கு
அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது. வருடாந்தம் சுமார் ஏழு மில்லியன் உல்லாசப் பயணிகள் கோபுரத்தைப் பார்வையிடுவது வழக்கம்.
கடந்த பல மாதங்களாக அது மூடப்பட்டி
ருந்ததால் ஏற்பட்ட மொத்த வருமான இழப்பு எழுபது மில்லியன் ஈரோக்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
18-07-2021