சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர் “ மதிப்பளிப்பு!

0
222

தமிழீழவிடுதலைப்  போராட்டத்தின் தொடக்க  காலத்தில்தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக,பல இராணுவ நெருக்கடிகளுக்குமத்தியில்,தொடர்உதவிகளையும்பங்களிப்புக்களையும்  வழங்கிய சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்கள்  10.07.2021 அன்று கனடாவில் சாவடைந்தார் என்ற செய்தி தமிழீழ மக்களைப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.தமிழீழத்  தேசியத்தலைவர்  மேதகு  வே.  பிரபாகரன்  அவர்களைப் பாதுகாப்பதற்காக விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலங்களில் பல அர்ப்பணிப்புக்களைச்  செய்ததுடன்,

தமிழீழ  விடுதலைப்  போராட்டத்தில் போராளிகளின்    இரகசிய மற்றும் மருத்துவத் தேவைக்கான கடற்போக்குவரத்து உதவிகளையும் வழங்கிப் பெரும்பங்காற்றினார்.

நெருக்கடியான  காலகட்டங்களில் தமிழீழ  விடுதலைப்  போராட்டத்திற்கு உதவிய   காரணத்திற்காகப்பல ஆண்டுகள் இந்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தமிழீழம்,  தமிழகம்  மட்டுமன்றி அவர்வாழ்ந்த புலம்பெயர்   நாடுகளிலும்   விடுதலைப்போராட்டத்திற்கு   வலுச்சேர்க்கும் காத்திரமான பணிகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.

தமிழீழ  விடுதலைப்போராட்டத்திற்காக,வெளித்தெரியாஅளப்பரிய பங்காற்றிய இவரது இழப்பினால் துயருற்றிருக்கும்  குடும்பத்தினர், நண்பர்களின்  துயரில்  நாமும்  பங்கெடுத்துக்கொள்வதுடன், காலத்தின் தேவையுணர்ந்து  தமிழீழ  விடுதலைப்  போராட்டத்திற்கு    அளப்பரிய பங்காற்றிய சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்”என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here