யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டமானது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.