ஈகப்பேரலைகள்!

0
263

katunayaka-black-tigers
தாய்மடி ஈன்ற தமிழ்ப்பூக்கள்
தீயடி ஏந்திய குளிர்தென்றல்கள்
தாயடி தலைவனின் பணியேற்று
போய்வெடியான புதிர் நீங்கள்.

போர்த்தடம் மாற்றிய உம்செயல்கள் – நீர்
வேர்த்தடம் பற்றிய வெந்தழல்கள்
யார்த்திடும் வீரத்தின் சந்தங்களால்
பார்தொடும் பரணிசெய் பாவலர்கள்.

நேரங்கள் உங்களை நிறுத்தவில்லை
தூரங்கள் உங்களைத் துரத்தவில்லை
பாரங்கள் உங்களைத் தடுக்கவில்லை
யாரும் உங்களை அறிந்தவரில்லை – நீர்

அசைந்திடும்போது ஓசை ஒளிந்திடும்
நகர்ந்திடும் பொது காற்றும் வழிவிடும்
பலமயில் கடப்பதை இருளே அறிந்திடும் – நீர்
பகைக்கு எமனான ஈகப்பேரலைகள்

நொந்து எம்மக்கள் சாவோடு வாழ – அவர்
சுந்தரவாழ்வைச் சுடுகாடாக்கி
வந்து எம் மண்ணிலே குண்டுகள் போட்ட
வானூர்திக் கழுகுகள் இருப்பிடம் கண்டு

மனவுறுதி பலம் கொடுக்க – கடும்
பயிற்சியது திடம் கொடுக்க
பகலிரவு பாராது நடந்து
பசிதாகம் தொலைத்து மறந்து

சடுதியில் கட்டுநாயக்கா படைத்தளம்
நடுவிலே புகுந்து சென்ற படைக்கலங்கள்
எதிரியவன் எதிர்பாரா வேளை இடியாகி
சிதற வெடித்து திகைப்பூட்டிய திகிலவர்கள்

தமிழினப்படுகொலையை அரங்கேற்றி – அரசு
அழித்தொழித்த “கறுப்பு யூலை” நாளில்
பகைவருக்குப் பாடம் சொல்லத் திடங்கொண்டு
தமையே அர்ப்பணித்த தற்கொடையர்

வேந்தன் அண்ணன் பெருமை கொள்ள
வெற்றி பெற்றுத் தந்துவிட்டு – அவ்
வெற்றிதனை உணருமுன்னே
விழிமூடிப் போனவரே!

ஈடுமக்கு இல்லையென்றோ
இணையில்லா ஈகையரே – தமிழ்
ஈழமதை மீட்டெடுத்து – உம்
காலடியில் படையல் செய்வோம் உறுதி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

கலைமகள்
24.07.2015

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here