பிரான்சில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான 93 பிரிவின் le bourget நகரில் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் முகாம் கடந்த 09.07.2021 வெள்ளிக்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றது.
குறித்த முகாமில் பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி ஏற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் மக்களின் வருகை மிகக் குறைவாக இருந்த நிலையில் நாம் மக்களை நாடிச் சென்று அவர்களை அழைத்து வந்து தடுப்பூசி ஏற்றிய தாகவும். இன்று மக்கள் பெரும் எண்ணிக்கையில் அலைமோதி முண்டியடித்து தடுப்பூசி ஏற்றுவதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
இன்று 15.07.2021 வியாழக்கிழமை முகாமின் இறுதி நாள் என்பதால் மக்கள் நீண்ட வரிசையில் அதிகாலை முதல் காத்திருக்கின்றதாக அறிய முடிகிறது.
நேற்றைய தினம் பிரான்சின் சுதந்திர தினமாக இருந்த போதிலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் நீண்ட வரிசையில் அதிகாலை முதல் காத்திருந்து தடுப்பூசி ஏற்றியதுடன், பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(எரிமலையின் செய்திப் பிரிவு)