இந்தியாவில் முதலாவது கொரோனா நோயாளி என்று உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ மாணவி ஒருவர் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளார்
என்ற தகவலை இந்திய ஊடகங்கள்
வெளியிட்டிருக்கின்றன.
கேரளா மாநிலம் திரிசூர் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி மருத்துவக் கல்வி
தொடர்பாக புதுடில்லி செல்ல இருந்தார்.
அதற்கு முன்பாக அவருக்கு நடத்தப்பட்ட
பரிசோதனையிலேயே அவருக்குத் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
நோய் அறிகுறிகள் ஏதும் இன்றி அவர் தனது இல்லத்தில் தங்கி உள்ளார் என்று
திரிசூர் மாவட்ட மருத்துவ அதிகாரியான
மருத்துவர் கே. ஜே. றீனா (Dr KJ Reena)
தெரிவித்திருக்கிறார்.
அந்த மாணவி சீனாவின் வுஹான் (Wuhan) மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டில் பயின்று கொண்டிருந்த சமயத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி தவணை விடுமுறையில் கேரளாவுக்குத் திரும்பி இருந்தார். அப்போது அவர் கொரோனா
வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருந்தது
உறுதிப்படுத்தப்பட்டது. திரிசூர் பல்கலைக்கழக மருத்துவமனையில்
மூன்று வாரங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின் தொற்றில் இருந்து
மீண்டிருந்தார்.
சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவியிருந்த சமயத்தில் அங்கிருந்து திரும்பிய அந்த மாணவியே
இந்தியாவில் தொற்று உறுதிப்படுத்தப் பட்ட முதலாவது நோயாளி என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்
டிருந்தார். தற்போது சுமார் ஒன்றரை வருடகால இடைவெளிக்குப் பின்னர்
அவரை மீண்டும் வைரஸ் பீடித்துள்ளது.
அண்மையிலேயே அவர் தனது முதலா
வது தடுப்பூசியை ஏற்றியிருந்தார்.
ஒருவர் இரண்டாவது தடவையாக வைரஸ் தொற்றுக்கு இலக்காவதில்
ஆச்சரியம் ஏதும் இல்லை என்று கூறி
யுள்ள இந்திய மருத்துவர்கள், மாணவி
யின் நிலையைத் தொடர்ந்து கண் காணித்துவருவதாகத் தெரிவித்துள்ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்.
14-07-2021