
பாரிஸின் புறநகரான எஸோனில் ஆறு வயதுக் குழந்தை ஒன்று ரயிலில் நசியுண்டு உயிரிழந்த சம்பவம் தொடர்
பாகப் பொலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
எஸோனில் (Essonne) Égly என்ற சிறிய
ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள
ரயில் கடவைப் பகுதியில் கடந்த திங்கட்
கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்
றுள்ளது.
14 வயதுடைய சகோதரனின் கைப் பிடியில் இருந்து தப்பிய குழந்தை ரயில் கடவை ஊடாக ஓடிச் சென்ற சமயம் RER
C ரயில் ஒன்றினுள் அகப்பட்டு நசியுண்ட
தாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ரயில் ஒன்று கடந்து செல்வதற்காக வீதியில் ரயில் கடவை மூடப்பட்டிருந்த சமயத்திலேயே குழந்தை தனது சகோதரனின் பிடியில் இருந்து தப்பிக் கடவைக்குக் கீழாகத் தண்டவாளப் பகுதியை நோக்கி ஓடிச் சென்றதாக விபத்தை நேரில் கண்டவர் கள் தெரிவித்துள்ளனர்.
பொலீஸாரும் முதலுதவிப் படையினரும்
அங்கு விரைந்து வந்து நசியுண்ட குழந்தையின் உடலை மீட்டு எடுத்தனர்.
இதனால் அந்த மார்க்கத்தில் ரயில் சேவைகள் சில மணிநேரம் நெருக்கடிக்கு
ள்ளாகியது. குழந்தையைப் பாதுகாப்பில்
இருந்து தவறவிட்ட காரணத்தால் இந்த
விபத்துச் சம்பவம் கொலைக் குற்றச் சாட்டின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை –
பாரிஸ் Gare du Nord மெற்றோ ரயில்
நிலையத்தில் கடந்த ஞாயிறன்று பெண்
ஒருவர் பயணிகள் மேடையில் இருந்து
தவறித் தண்டவாளத்தில் வீழ்ந்துள்ளார்.
அச்சமயம் அங்கு வந்த ரயில் அவரை
மோதியதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனை
யில் சேர்க்கப்பட்டார்.மெற்றோ இலக்கம் 5 வழித்தடத்தில் (metro line 5) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதே தினம் பாரிஸ் Châtelet-les Halles ரயில் நிலையத்தில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் ஆண் ஒருவர் RER B ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார்.
(படம் :எஸோனில் விபத்து நடந்த Égly ரயில் நிலையப் பகுதி)
குமாரதாஸன். பாரிஸ்.
14-07-2021