
வரலாற்று திருப்புமுனையாக அமைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் “புலிப்பாச்சல்” நடவடிக்கை 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்றாகும்.
யாழில் வலிகாமம் மேற்கு பகுதியூடாக சிறிலங்கா இராணுவத்தினரால் , தரையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலை புலிகளால் புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மேற்கொள்ள்ளப்பட்டது.

புலிப்பாச்சல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காலம் பௌர்ணமிகாலமாகும்.
எனினும் நிலவு காலத்தில் வலிந்த தாக்குதல்களைச் செய்வதில் அதிகளவு பாதகத்தையே சந்திக்க வேண்டிய நிலமை வரும்.
ஆனால் அந்த நிலவுகாலத்தில் எதிரியிடமிருந்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு காலம் கொடுத்தது.
புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் புலிகளின் இராணுவத் திறனும் எதிரியுடனான சண்டையும், எதிரியால் எதிர்கொள்ள முடியாது போக கைப்பற்றிய பகுதிகளை விட்டு சிறிலங்கா இராணுவத்தினர் பின்வாங்கிப் போனார்கள்.
ஊர்காவற்துறையிலிருந்து அராலிக்கூடாக உள் நுழைந்த இராணுவ அணிமீதும் “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கை தமிழீழதேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
இந்தச் சண்டைகள் வலிகாமம் மேற்குப் பகுதியில் நடந்தன. கடுமையான எதிர்த்தாக்குதல்களைத் தாங்கமுடியாத இராணுவம் பின்வாங்கி தமது முன்னைய நிலைகளுக்குள் சென்று முடங்கிக்கொண்டது.
புலிப்பாச்சல் நடவடிக்கையின்போது 150க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
அதோடு சிறீலங்காவின் (முன்னோக்கிப்பாய்தல்) நடவடிக்கை தோல்வியில் முற்றுப்பெற்றமையும் இங்கு குறிபிட்டு சொல்லவேண்டிய விடயம்.
காலங்கள் அழிந்தாலும் அழியாதவர்கள் நம் மாவீரர்கள். நம் தேசவிடுதலைக்காய் இந்நாளில் உயிர் நீத்த நம் வீர மறவர்களையும் நினைவுகூருவதில் நாம் பெருமைகொள்கின்றோம்..
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்