
பிரான்ஸில் உணவகம், சினிமா போன்ற பல பொது இடங்களுக்குள் நுழைவதற்கு
சுகாதாரப் பாஸ் கட்டாயம் என்று அரசுத்
தலைவர் அறிவித்த கையோடு லட்சக்
கணக்கானோர் தடுப்பூசி ஏற்ற முன்வந்
திருக்கின்றனர்.
இதனால் தடுப்பூசி ஏற்றும் இடம், காலம் என்பவற்றை உறுதி செய்வதற்காக
விண்ணப்பிக்கின்ற ‘டொக்ரோலிப்’
(Doctolib) என்ற மருத்துவர்களது இணையத்தளத்தில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.
நேற்று திங்கட்கிழமை அதிபரது
உரைக்குப் பிறகு அன்றிரவு சுமார்
ஒன்பது லட்சம் பேர் (926 000) தடுப்பூசி பெறுவதற்கு முண்டியடித்து விண்ணப்
பித்துள்ளனர். அவர்களில் 65 வீதமானவர்கள் 35 வயதுக்குக் குறைந்தவர்கள் என்ற தகவலை டொக்ரோலிப் (Doctolib) இணையத்
தளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
வெளியிட்டிருக்கிறார்.
பிரான்ஸில் தடுப்பூசி ஏற்றவேண்டிய
வயதில் உள்ள சனத் தொகையினரில்
47 சதவீதமானவர்கள் இதுவரை ஒரு
ஊசியைக்கூடப் பெற்றுக்கொள்ளவி
ல்லை. பல்வேறு காரணங்களால் தடுப்பூசி ஏற்றப் பின்னடித்து வருகின்ற
இத்தகையோர் அவசர தேவைகளுக்கு
பிசிஆர் பரிசோதனை மூலமான சான்றி
தழ்களைப் பயன்படுத்த முடியும் என்ற
எண்ணத்தில் இருக்கின்றனர். ஆனால்
எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் இருந்து
இலவசமாக பிசிஆர் பரிசோதனை செய்
கின்ற சகல வசதிகளும் முடிவுக்கு வரும்
என்று அதிபர் அறிவித்திருக்கிறார். இதனால் வைரஸ் பரிசோதனைகளுக்கு
இனிமேல் பணம் செலுத்த வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
🔴தாதியர் தொழில் இழப்பர்
இதேவேளை, தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மருத்துவப் பணியாளர்க
ளுக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம்
15 ஆம் திகதிக்குப் பின்னர் சம்பளம்
கிடைக்காது. அவர்கள் வேலையை
இழக்கின்ற நிலையும் ஏற்படும் என்று
சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்
தெரிவித்திருக்கிறார்.
தாதியர்கள், பராமரிப்பாளர்கள் போன்ற
பணிகளில் உள்ளோருக்கு தடுப்பூசியை
கட்டாயமாக்கும் அறிவிப்பை அதிபர்
மக்ரோன் நேற்றைய தனது உரையில் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்தே
சுகாதார அமைச்சர் இந்த விடயங்களை
வெளியிட்டிருக்கிறார்.
சுகாதார அமைச்சர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில், அதிபர் மக்ரோனின் அறிவிப்புகளை பிரெஞ்சு மக்கள் மீதான “தடைகளாகவோ” அல்லது
“பிளாக்மெயில்” (“un chantage”) ஆகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டார்.பொது முடக்கமா (confinement) அல்லது சுகாதாரப் பாஸா (pass sanitaire) என்ற கேள்வியை நம்மை நோக்கி நாமே எழுப்புவது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
குமாரதாஸன். பாரிஸ்
13-07-2021