கொரோனா வைரஸ் , சில புதிய செய்திகள் !

0
454

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் உரைக்குப் பின்னர் பல்வேறு புதிய செய்திகள் கொரோனா வைரஸ் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.  

ஜனாதிபதியின் நேற்றைய தொலைக்காட்சி உரையை 22.4 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். இத்தகவலை Médiamétrie நிறுவனம் அறிவித்துள்ளது.  

நேற்று மக்ரோனின் உரைக்குப் பின்னர் இதுவரை 1.3 மில்லியன் பேர் தங்களது தடுப்பூசிக்காக முன்பதிவுகள் செய்துள்ளனர்.  நேற்று இரவு 926.000 பேர் முன்பதிவுகள் மேற்கொண்டிருந்த நிலையில், இன்று காலை 350.000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.  Doctolib இணையத்தளத்தில் நிமிடம் ஒன்றுக்கு 4000 இல் இருந்து 5000 பேர் வரை முன்பதிவுகள் மேற்கொள்கின்றனர். 

SNCF கட்டுப்பாட்டாளர்கள் கட்டாயமாக சுகாதார பாஸ் (pass sanitaire) வைத்திருக்க வேண்டும் என அதன் நிர்வாக இயக்குனர் Jean-Baptiste Djebbari இன்று காலை அறிவித்துள்ளார். 

சுகாதார பாஸ் (pass sanitaire) 12 வயதுக்கு மேல் கட்டாயம் என அரச பேச்சாளர் Gabriel Attal அறிவித்துள்ளார். உணவகம் மற்றும் கஃபே விடுதிகளின் வெளி முற்றங்களில் அமர்ந்தாலும் இந்த pass sanitaire தேவை எனவும், அல்லது 24 மணிநேரத்துக்குட்பட்ட PCR எதிர்மறை முடிவுகள் தேவை எனவும் அரச பேச்சாளர் Gabriel Attal அறிவித்துள்ளார். 

நேற்று இரவு Doctolib தளமூடாக மேற்கொள்ளப்பட்டிருந்த 923.000 முன்பதிவுகளில் 65% வீதமானவர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here